Home /News /entertainment /

Rajinikanth: என்றென்றும் ரஜினி...!

Rajinikanth: என்றென்றும் ரஜினி...!

ரஜினி

ரஜினி

கலைந்த சிகை, கறுத்த மேனி, அலட்சிய பார்வை, திரையில் அதுவரை பார்த்திராத ஸ்டைல் என ரசிகர்களை சுண்டி இழுத்தார் ர‌ஜினி.

  • News18
  • Last Updated :
ரஜினி இந்திய திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை இன்று பெற்றுள்ளார். நடிகர் என்ற அடையாளத்துக்கு மேலாக அவரது பெயர் தமிழகத்தில் உருவாக்கியிருக்கும் தாக்கம் ஆச்ச‌ரியமானது. ர‌ஜினியின் பிரபல்யத்தை தனிப்பட்ட சாதனையாக ஏற்க மறுப்பவர்களுக்கும் வியப்பளிக்கக்கூடிய புதிர் அது. சிவா‌ஜிராவ் கெய்க்வாட் ர‌ஜினியாக ப‌ரிமாணம் அடைந்த நெடுங்கதையின் சாராம்சத்தில் ஒருவேளை இந்த புதிருக்கான விடையை ஒருவர் கா‌ண‌க்கூடும்.

பொருளாதார நெருக்கடியால் இடப்பெயர்வுக்கு நிர்ப்பந்திக்கப்ட்ட குடும்பம் ஜினியுடையது. மராட்டிய மன்னர் சிவாஜியின் பாதுகாவலர்களின் வா‌‌ரிசுகளில் சிலர் கர்நாடாகாவுக்கு குடிபெயர்ந்தனர்.. சிலர் கிருஷ்ணகி‌‌ரி அருகிலுள்ள நாச்சிக்குப்பத்தில் குடியேறினர். அப்படி குடிபெயர்ந்து வந்த குடும்பத்தில் பிறந்தவர் ஜினியின் தந்தை ரானோஜிராவ் கெய்க்வாட். ஜினியை அவரது தாயார் ராம்பாய் நாச்சிக்குப்பத்தில் பெற்றெடுத்தார் என்பது சமீபத்தில் தெரியவந்திருக்கும் உண்மை. ரானோஜிராவுக்கு கர்நாடகா காவல்துறையில் வேலை கிடைத்ததை தொடர்ந்து கர்நாடகாவுக்கு மீண்டும் ஒரு இடப்பெயர்வை மேற்கொண்டது ஜினியின் குடும்பம்.

ஜினியின் நடத்துனர் வேலையும், அவரது சினிமா பிரவேசமும் அனைவரும் அறிந்தது. எதிர்பாராத விபத்தால் நிகழ்ந்த அற்புதமல்ல ஜினியின் திரை பிரவேசம். பசி, பட்டினி, அலைச்சல், அவமானங்கள், காத்திருப்புகள், ஏமாற்றங்கள் என அனைத்தும் நிரம்பியது அவரது ஆரம்ப காலம். சினிமா பின்னணி வாய்க்கப்பெறாத ஒருவர் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் ஜினியும் எதிர்கொண்டார்.

கலைந்த சிகை, கறுத்த மேனி, அலட்சிய பார்வை, திரையில் அதுவரை பார்த்திராத ஸ்டைல் என ரசிகர்களை சுண்டி இழுத்தார் ஜினி. சினிமாவின் அழகியல் இலக்கணங்களுக்கு அப்பாற்பட்ட அவரை தங்களின் பிரதிநிதியாக பார்க்க தலைப்பட்டார்கள் சாதாரண ஜனங்கள். அவர்கள், ஆறிலிருந்து அறுபதுவரை, ‌‌ரியா, முள்ளும் மலரும் படங்கள் ஜினியின் நடிப்புத் திறமைக்கு இன்றும் சான்றுகளாக திகழ்கின்றன.

இந்தப் பட்டியல் மேலும் வளராமல் நின்று போனதற்கு ஏவிஎம் தய‌‌ரித்த முரட்டுக்காளைக்கு பெரும் பங்குண்டு. கதை நாயகன் கதாநாயகனாக மாற்றம் கொண்ட விபத்து இந்த காலகட்டத்தில்தான் நடந்தது. அதிலிருந்து இன்று வரை ஜினியால் மீண்டு வர முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

ரசிகர்கள், தய‌‌ரிப்பாளர்கள் மற்றும் வியாபா‌‌ரிகளின் விருப்பத்திற்கேற்ப அவர் கட்டியெழுப்பிய கதாநாயக பிம்பத்திற்கு எதிராக செயல்பட்ட போதெல்லாம் அவருக்கு தோல்வியே ரிசானது. ராகவேந்திரராக அவர் நடித்த போதும், பாபாவில் சக்தி வேண்டி கடவுளிடம் கை ஏந்திய போதும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள் அவரது ரசிகர்கள்.

ஜினி என்பது இன்று ஒரு பெயர் மட்டுமல்ல. ஜினி என்பது ஒரு நபருமல்ல. அதையெல்லாம் தாண்டி அது ஒரு மிகை யதார்த்த பிம்பம். அந்த பிம்பத்திற்கு எதிராக ஜினியாலும் ஒன்றும் செய்ய இயலாது. ராகவேந்திரர், பாபா படங்கள் தோல்வி அடைந்ததற்கு இதுவே காரணம்..

இந்த பிம்பத்திற்கு மேலும் வலு சேர்க்கும் படங்களையே மீண்டும் மீண்டும் தேர்வு செய்கிறார் ஜினி. சமூகத்தின் பிரக்ஞையில் பதிந்திருக்கும் அந்த பிம்பத்திற்கு இசைவாகவே குறைந்தபட்சம் தனது திரைவாழ்க்கையையாவது அமைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஜினிக்கு இருக்கிறது. ஒரு ப்‌‌ரியா, ஒரு முள்ளும் மலரும், ஒரு ஆறிலிருந்து அறுபதுவரை அவரது வாழ்வில் இனி சாத்தியமா என்பது கேள்விக்குறி. குசேலனில் தன்னை சுற்றியிருந்த தங்க வேலியை நெகிழ்த்தும் சந்தர்ப்பம் ஜினிக்கு கிடைத்தது. அவர் விரும்பியும் அவரை சுற்றியிருந்த வியாபார நிர்ப்பந்தத்தால் அது முடியாமல் போனது துரதிர்ஷ்டம்

Also read... சுந்தர் சி.க்கு லாஜிக் சொல்லிக் கொடுத்த ரஜினி...!

அமிதாப்பச்சனின் கோபக்கார இளைஞன் வேடத்தை தமிழில் வெற்றிகரமாக பிரதி செய்து சூப்பர் ஸ்டாரானவர் ரஜினி. லிங்காவின் தோல்விக்குப் பின், அமிதாப்பச்சனைப் போல் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் ரஜினி நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு கபாலியில் ஏற்பட்டது. வயதுக்கேற்ற வேடம் என்றாலும், அதிலும் பாட்ஷா போல் அநீதியை வென்று நீதியை நிலைநாட்டும் நாயகனாகவே வந்தார். சீனி கம், ஷமிதாப், பிக்கு, பிங்க் போன்ற படங்களில் அமிதாப் ஏற்று நடித்தது போன்ற வேடங்களை ரஜினி செய்வார் என்ற எதிர்பார்ப்பு கபாலி, காலாவில் முற்றிலுமாக தகர்ந்தது. வயதானாலும், அவர் ஹீரோயிசத்தை கைவிட முடியாது என்பதை இந்தப் படங்கள் உறுதி செய்தன. ஒருவகையில் அது ரஜினியின் தவறு இல்லை. அமிதாப்பச்சனின் மாஸ் கமர்ஷியல் படங்கள் தோல்வியடைய, அவர் குணச்சித்திர வேடங்களுக்கு திரும்பினார். ஆனால், ரஜினியின் மாஸ் இமேஜ் இன்னும் சரியாமல் அப்படியே உள்ளது. இன்றும் தமிழகத்தில் அதிகம் வசூலிக்கும் ஸ்டார் அவரே. 25 வருட அரசியல் வருகைக்கு முற்றுப்புள்ளி வைத்த நிலையில், முதல் படமாக நவம்பர் 4 அண்ணாத்த வெளியாகிறது. அரசியல் பின்வாங்கலுக்குப் பிறகு ரஜினியின் இமேஜ் சரிந்ததா இல்லை அப்படியே உள்ளதா என்று உரசிப்பார்க்கும் உரைகல்லாக அண்ணாத்த இருக்கப் போகிறது.

ஒருகட்டத்துக்கு மேல் ரஜினிக்கு போட்டியாளர்களே தமிழில் இல்லை. அவர் எட்ட வேண்டிய உயரங்களும் இல்லை. அவர் முன் இருந்த ஒரே சவால், சமூகம் உருவாக்கி வைத்திருந்த ரஜினி என்ற பிம்பத்தை கடந்து வருவது. இதன் பொருள் தனது அடையாளத்தை அளிப்பதல்ல. ஒரே அடையாளத்தில் தங்கிப் போகாமல் அதனை கடந்து வருவது. கபாலி, காலாவில் சாத்தியமாகாத அது இனிமேல் சாத்தியமாக வழியில்லை. இதுவும் நமது ரசனையின் தோல்வியே அன்றி ரஜினியின் தோல்வியல்ல.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Rajini Kanth, Rajinikanth, Rajinikanth Fans

அடுத்த செய்தி