• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நயன்தாராவின் கனெக்ட் கொரோனா ஊரடங்கில் எழுதப்பட்ட கதை!

நயன்தாராவின் கனெக்ட் கொரோனா ஊரடங்கில் எழுதப்பட்ட கதை!

கனெக்ட்

கனெக்ட்

இந்தப் படத்தின் கதையை அஸ்வினுடன் இணைந்து காவியா ராம்குமார் எழுதியுள்ளார். மணிகண்டன் கிருஷ்மாச்சாரி ஒளிப்பதிவு செய்ய, பிருத்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நயன்தாரா நடிக்கும் கனெக்ட் திரைப்படத்தின் கதை கொரோனா முதல் ஊரடங்கின் போது எழுதப்பட்ட கதை என இயக்குனர் அஸ்வின் சரவணன் கூறியுள்ளார்.

அஸ்வின் சரவணன் இதற்கு முன் மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கியிருக்கிறார். இரண்டுமே ஹாரர் படங்கள். இதில் மாயா படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்தார். கொரோனா முதல் ஊரடங்கின் போது மக்களுக்கு ஏற்பட்ட பயத்தையும், மன உளைச்சலையும் கதையாகக்க வேண்டும் என்ற முனைப்பில் அஸ்வின் எழுதிய கதைதான் கனெக்ட். முதல் ஊரடங்கின் அனைத்து அழுத்தங்களையும் கனெக்ட் படம் பிரதிபலிக்கும் என அவர் கூறியுள்ளார்.

படத்தின் கதையை எழுதும் போதே, இதனை நயன்தாரா மட்டுமே செய்ய முடியும் என உணர்ந்ததாகவும், கதையை நயன்தாராவிடம் சொன்னதும் அவர் நடிக்க ஒப்புக் கொண்டதுடன், படத்தை தானே தயாரிக்க முன் வந்ததாகவும் அஸ்வின் கூறியுள்ளார். படத்தில் அனுபம் கேர், சத்யராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களை செய்கிறார்கள். பாடகி ஹனியா நஃபீஸியாவும் முக்கிய வேடத்தில் நடிக்கயிருக்கிறார்.

கனெக்ட் படத்தின் படப்பிடிப்பை உடனே தொடங்குவதாக இருந்தனர். சென்னையில் கன மழை பெய்து வருவதால் டிசம்பர் மாதத்துக்கு படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மும்பையில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். பொதுவாக தமிழில் வரும் ஹாரர் படங்கள் மலிவான காமெடிப் படங்களாக இருக்கும். ஆனால், கனெக்ட் படம் அப்படி இருக்காது என அஸ்வின் உத்தரவாதம் அளித்துள்ளார். படத்தில் பாடல்கள், காமெடிக் காட்சிகள், நடனம் என எதுவும் இல்லை. முழுமையான ஹாரர் படமாக கனெக்ட் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

Also read... இசையமைப்பாளர் தமனை அவமதித்தாரா பிரபல ஹீரோ...?

இந்தப் படத்தின் கதையை அஸ்வினுடன் இணைந்து காவியா ராம்குமார் எழுதியுள்ளார். மணிகண்டன் கிருஷ்மாச்சாரி ஒளிப்பதிவு செய்ய, பிருத்வி சந்திரசேகர் இசையமைக்கிறார். ரிச்சர்ட் கெவின் எடிட்டிங். நயன்தாராவின் முந்தைய நாயகி மையப்படமான வெற்றிக்கண் ரசிகர்களை கவரவில்லை. அஸ்வின் இயக்கத்தில் நடித்த மாயாவும் அத்தனை வரவேற்பை பெறவில்லை. கனெக்ட் ஏமாற்றாது என நம்புவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: