‘முப்பாட்டன் குலம் காக்க வரலாற மாத்து’... அசுரன் பட பாடல்கள் ரிலீஸ்

‘முப்பாட்டன் குலம் காக்க வரலாற மாத்து’... அசுரன் பட பாடல்கள் ரிலீஸ்
தனுஷ்
  • News18
  • Last Updated: August 28, 2019, 7:49 PM IST
  • Share this:
அசுரன் படத்தின் 2 பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

வடசென்னை படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் அசுரன். பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி  வரும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ், அப்பா, மகன் என்று இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.

படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர், பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கென், பவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.


பொல்லாதவன், மயக்கம் என்ன, ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து 8 வருட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் அசுரன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதனால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பொல்லாத பூமி, கத்தரி பூவழகி ஆகிய இரண்டு பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜி.வி.பிரகாஷ் மண் சார்ந்த இசை இந்தப் படத்தில் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்திருந்தார். அதேபோல் இந்தப் படத்தின் பாடல்கள் உரிமையை கானா நிறுவனம் ரூ.1 கோடிக்கு வாங்கியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கூறினார்.Loading...

First published: August 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...