என்னை பல பேர் ஏமாத்திருக்காங்க - வேதனையை கொட்டிய தனுஷ்!

news18
Updated: August 28, 2019, 6:56 PM IST
என்னை பல பேர் ஏமாத்திருக்காங்க - வேதனையை கொட்டிய தனுஷ்!
நடிகர் தனுஷ்
news18
Updated: August 28, 2019, 6:56 PM IST
திரைத்துறையில் பலர் தன்னை ஏமாற்றிருப்பதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

வடசென்னை படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் அசுரன். பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி  வரும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ், அப்பா, மகன் என்று இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.

படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர், பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கென், பவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.


அக்டோபர் 4-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் தனுஷ், எனக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். நான் மிகவும் ரசித்து நடித்த படம்.

என்னுடைய பழைய படங்களை இப்போது பார்த்தால் நிறுத்தி விடுகிறேன். இல்லை எழுந்து சென்று விடுகிறேன். ஏன் என்றால் நான் சினிமாவிற்கு வந்த போது நடித்ததை விட இப்போது வரக்கூடியவர்கள் மிகுந்த திறமையாக உள்ளனர். அதை பார்க்கும் போது தான் அவ்வாறு தோன்றுகிறது. வெற்றிமாறனின் மிகச்சிறந்த படமாக அசுரன் இருக்கும் என நான் நினைக்கிறேன்.

வடசென்னைக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்று பலரும் கேட்கிறார்கள். வட சென்னை படத்தில் பணியாற்றிய கலை இயக்குநருக்கு விருது கிடைக்காதது வருத்தம் தான். மேற்குத் தொடர்ச்சி மலை, ராட்சசன், பேரன்பு உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் தான்.

Loading...

நாங்கள், 2010-ம் ஆண்டிலேயே தேசிய விருது வென்றுவிட்டோம். எங்களுக்கு பேராசையில்லை. வெற்றிமாறன் தேசிய விருது குறித்து எங்கேயும் பேச வேண்டாம் என்று சொன்னார். ஆனால் என் மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்கிறேன். விருது வாங்கிய போது குதிச்சதுமில்ல. விருது கிடைக்கலயே அப்படின்னு துடிச்சதுமில்ல. விருதுக்காக நாங்கள் படமெடுப்பதுமில்லை. மக்களுக்கு படம் பிடித்திருக்கிறது. அந்த கவுரம் எங்களுக்கு கிடைத்துவிட்டது. அதுபோதும்.

இந்த காலத்தில் ஒரு தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்குவது சாதாரண விஷயமல்ல. அதே பெரிய வேலையாக இருக்கிறது. பல பேர் என்னை ஏமாற்றி இருக்காங்க. ஏமாத்திட்டும் இருக்காங்க. ஆனால் அசுரன் படம் ஆரம்பிப்பதற்கு முன்னரே முழு சம்பளத்தையும் என்னிடம் கொடுத்தார் தாணு. அந்த நேரத்தில் அந்தப் பணம் எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது” என்றார்.

வீடியோ பார்க்க: பாலியல் குற்றங்களுக்கு அரபு நாடுகளைப் போல் தண்டனை கொடுக்க வேண்டும் - த்ரிஷா

First published: August 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...