வட சென்னைக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமா? - தனுஷ் ஓபன் டாக்!

வட சென்னைக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமா? - தனுஷ் ஓபன் டாக்!
நடிகர் தனுஷ்
  • News18
  • Last Updated: August 28, 2019, 6:27 PM IST
  • Share this:
தேசிய விருதுக்காக எப்போதும் படமெடுப்பதில்லை என்றும், வடசென்னை படத்துக்கு விருது கிடைக்காததற்கு வருத்தமில்லை என்றும் நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

சமீபத்தில் 66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. கன்னடா, மலையாளம், தெலுங்கு மொழிகளின் திரைப்படங்கள் பல தேசிய விருதுகளை வென்றுள்ள நிலையில், தமிழில் பாரம் என்ற ஒரு படத்துக்கு மட்டுமே தேசிய விருது கிடைத்துள்ளது.

பரியேறும் பெருமாள், பேரன்பு, மேற்குத் தொடர்ச்சி மலை, ராட்சசன் உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது தமிழ்த் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்நிலையில் வட சென்னை படத்துக்கு தேசிய விருது கிடைக்காததற்காக தான் வருத்தப்படவில்லை என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்க்கு தேசிய விருது கிடைக்காததற்காக நான் வருந்தியதாக சொன்னார். ஆமாம், மேற்குத் தொடர்ச்சி மலை, ராட்சசன், பேரன்பு உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் தான். நாங்கள், 2010-ம் ஆண்டிலேயே தேசிய விருது வென்றுவிட்டோம். எங்களுக்கு பேராசையில்லை. வெற்றிமாறன் தேசிய விருது குறித்து எங்கேயும் பேச வேண்டாம் என்று சொன்னார். ஆனால் என் மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்கிறேன். விருது வாங்கிய போது குதிச்சதுமில்ல. விருது கிடைக்கலயே அப்படின்னு துடிச்சதுமில்ல. விருதுக்காக நாங்கள் படமெடுப்பதுமில்லை. மக்களுக்கு படம் பிடித்திருக்கிறது. அந்த கவுரம் எங்களுக்கு கிடைத்துவிட்டது. அதுபோதும்” என்றார்.

வீடியோ பார்க்க: அஜித் ரசிகர் எரித்து கொலை.. நண்பர்களே செய்த கொடூர சம்பவம்

Loading...

First published: August 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...