நவரசா மூலம் 12,000 குடும்பங்களுக்கு உதவி - மணிரத்னம்

ஜெயேந்திர பஞ்சாபகேசன் - மணிரத்னம்

ஆறு மாதங்களுக்கு நம் திரைத்துறையைச் சார்ந்த 12,000 குடும்பத்தினரின் வீட்டு தேவைகளுக்கு நம்மால் உதவ முடிந்தது.

 • Share this:
  நவரசா ஆந்தாலஜி மூலம் 12,000 குடும்பங்களுக்கு, ஆறுமாத காலத்துக்கு உதவி செய்ய முடிந்ததாக மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

  நவரசா ஆந்தாலஜி நெட்பிளிக்ஸில் சமீபத்தில் வெளியானது. மணிரத்னமும், ஜெயேந்திர பஞ்சாபகேசனும் இதனை தயாரித்திருந்தனர். ஒன்பது இயக்குனர்களின் ஒன்பது குறும்படங்களின் தொகுப்பாக நவரசா தயாரானது. சூர்யா, ரஹ்மான் போன்ற முன்னணி திரையுலகினர் இதில் பங்களிப்பு செலுத்தியிருந்தனர். ஆனால், ஆந்தாலஜி ரசிகர்களை கவர தவறியது.

  இந்த ஆந்தாலஜியை கொரோனா பேரிடரால் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான திரைத்துறையினருக்கு உதவும் பொருட்டு எடுத்தனர். அதனால், யாரும் நடிப்பதற்கோ, இசையமைப்பதற்கோ பிற வேலைகளுக்கோ பணம் வாங்கவில்லை. அவர்களுக்கு மணிரத்னமும், ஜெயேந்திர பஞ்சாபகேசனும் கூட்டாக நன்றி தெரிவித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  "எங்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி ஒன்று கூடி ஒரு ரூபாய் கூட ஊதியம் பெறாமல் தம் நேரத்தையும், உழைப்பையும் நல்கி நவரசாவை உருவாக்கிய அனைத்து இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றி.

  உங்களுடைய இந்த பேராதரவால் ஆறு மாதங்களுக்கு நம் திரைத்துறையைச் சார்ந்த 12,000 குடும்பத்தினரின் வீட்டு தேவைகளுக்கு நம்மால் உதவ முடிந்தது. உதவி என்பதைத் தாண்டி, நம் கலைக் குடும்பத்தினருக்கு நம் அன்பை, நன்றியை உணர்த்த முடிந்தது. பெருமையில் நன்றியுணர்ச்சியில் மகிழ்ச்சியின் உச்சத்தில் நிற்கிறோம் நாங்கள். நீங்களும் தானே? நீங்கள் இல்லாமல் இந்த மகிழ்ச்சியில்லை. மீண்டும் உங்களுக்கு நன்றி சொல்கிறோம்" என மணிரத்னமும், ஜெயேந்திர பஞ்சாபகேசனும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
  Published by:Shalini C
  First published: