Home /News /entertainment /

அசாம் வெள்ளபாதிப்பு நிவாரண நிதியாக ரூ. 25 லட்சம் வழங்கிய ஆமிர் கான்!!

அசாம் வெள்ளபாதிப்பு நிவாரண நிதியாக ரூ. 25 லட்சம் வழங்கிய ஆமிர் கான்!!

ஆமிர் கான்

ஆமிர் கான்

Aamir Khan Assam Flood : அசாம் வெள்ளத்தில் சுமார் 45 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    அசாம் வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக ரூ. 25 லட்சத்தை பாலிவுட் நட்சத்திரம் ஆமிர் கான் வழங்கியுள்ளார். இதற்கு அம்மாநில முதல்வர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

    அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு ஒருவார காலமாக தொடர் மழை பெய்ததால், பிரம்ம புத்ரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் பெரும்பாலான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதில் சுமார் 45 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    மோகன்லால் ரோலில் ரஜினிகாந்த்.. பிருத்வி ராஜ் சொன்ன பளீச் பதில்!

    நிலைமை அசாதாரணம் அடைந்திருப்பதால் மத்திய மாநில மீட்பு படையினர் களத்தில் இறக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் மற்றும் உணவு பொட்டலங்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் விநியோகம் செய்யப்படுகின்றன.

    அசாம் வெள்ள நிவாரணத்திற்கு பல்வேறு தரப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் ரூ. 25 லட்சத்தை நிவாரண நிதியாக அளித்துள்ளார்.

    Also read... ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் நடிகர் சூர்யா தேர்வு 

    இதுகுறித்து அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-

    முன்னணி பாலிவுட் நட்சத்திரமான ஆமிர் கான் அசாம் மாநில வெள்ள நிவாரண நிதியாக ரூ. 25 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். மக்கள் நலன் கருதி அவர் செய்திருக்கும் மகத்தான உதவிக்கு நன்றியும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஆமிர்கான் தற்போது லால் சிங் சத்தா என்ற படத்தை முடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 11-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தங்கல் படத்திற்கு பின்னர் தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் என்ற படத்தில் ஆமிர் கான் நடித்திருந்தார். இந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், லால் சிங் சத்தா திரைப்படம் மிகப்பெரும் வெற்றியைப் பெரும் என்று திரைத்துறையினர் கணித்துள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Aamir Khan

    அடுத்த செய்தி