• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Premam: ’நிஜ மலர் டீச்சர் அசின் தான்’ - ரகசியம் உடைத்த ‘பிரேமம்’ இயக்குநர்

Premam: ’நிஜ மலர் டீச்சர் அசின் தான்’ - ரகசியம் உடைத்த ‘பிரேமம்’ இயக்குநர்

அசின் - அல்போன்ஸ் புத்திரன் - சாய் பல்லவி

அசின் - அல்போன்ஸ் புத்திரன் - சாய் பல்லவி

அவரும், படத்தின் நாயகன் நிவின் பாலியும் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார்கள். கடைசிவரை அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

  • Share this:
    பிரேமம் படம் வெளியாகி ஆறு வருடங்கள் நிறைவடைந்ததை மே 29-ம் தேதி படக்குழுவினர் கொண்டாடினர். அதையொட்டி இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.

    உங்கள் படங்களில் தமிழ் மொழி, தமிழ் கதாபாத்திர பாதிப்பு அதிகமாக உள்ளதே என்று அவரிடம் கேட்கப்பட்டது. உதாரணமாக, பிரேமத்தில் வரும் மலர் டீச்சர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இந்த வேடத்தில் சாய் பல்லவி நடித்திருந்தார். பிரேமத்தின் 'சென்டர் ஆஃப் அட்ராக்ஷன்' இந்த கதாபாத்திரம் எனலாம்.

    இதற்கு பதிலளித்த அல்போன்ஸ் புத்திரன், கொச்சினைச் சேர்ந்த மலையாளியாக தான் மலர் டீச்சர் கதாபாத்திரத்தை எழுதியதாகவும், அதில் அசினை நடிக்க வைக்க விரும்பியதாகவும் குறிப்பிட்டிருந்தார். அசினை அவரும், படத்தின் நாயகன் நிவின் பாலியும் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார்கள். கடைசிவரை அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போது அசின் இந்திப் படங்களில் நடித்து வந்தார். அக்ஷய்குமாருடன் நடித்த போது அவரது நண்பர் தொழிலதிபர் ராகுல் சர்மாவுடன் காதலாகி 2016-ல் அவரை திருமணம் செய்து கொண்டார். அல்போன்ஸ் புத்திரன் அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது இந்திப் படங்கள், ராகுல் சர்மாவுடன் காதல் என்று அசின் பிஸியாக இருந்ததால் அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதன் பிறகே மலர் டீச்சர் கதாபாத்திரத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக மாற்றி எழுதி சாய் பல்லவியை நடிக்க வைத்ததாக அல்போன்ஸ் புத்திரன் குறிப்பிட்டிருந்தார். அதனால் தான் மலர் டீச்சர் என்ற பிரமாதமான கதாபாத்திரம் ரசிகர்களுக்கு கிடைத்தது.

    அல்போன்ஸ் புத்திரன் மலையாளி என்றாலும் படித்தது ஊட்டியில், அதன் பிறகு சினிமாவுக்காக சென்னை வந்தார். அதனால், தமிழும் அவருக்கு நல்ல பரிட்சயம். பிரேமம் வெளியாகி ஆறு வருடங்கள் முடிந்த நிலையில், பகத் பாசில், நயன்தாரா நடிப்பில் பாட்டு என்ற படத்தை இயக்கவுள்ளார் அல்போன்ஸ்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: