Asin: 3 வயது மகளுக்கு கதக் சொல்லித்தரும் அசின் - லைக்ஸை குவிக்கும் படம்!

அசின் - அரின்

ரசிகர்கள் வாழ்த்தியிருப்பதுடன், அரின் ரொம்ப க்யூட்டாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    நடிகை அசின் தனது 3 வயது மகளுக்கு கதக் சொல்லித் தரும் படம் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களின் மனதைக் கவர்ந்துள்ளது.

    'கஜினி', 'போக்கிரி', 'சிவகாசி', 'வரலாறு' மற்றும் 'எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' என 2000-களில் வெளியான பல பிளாக்பஸ்டர் படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார் அசின். பின்னர் தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு, படங்களில் நடிப்பதை விட்டு விலகினார். அவர்களுக்கு தற்போது அரின் என்ற மகள் இருக்கிறார். இப்போது அவருக்கு 3 வயது.

    தற்போது அசினின் மகள் கதக் கற்றுக் கொண்டிருப்பது தான் ஹாட் நியூஸ். அதையும் அசினே சொல்லித் தருகிறார். "வீக்கெண்ட் கதக் பிராக்டிஸ்... 3 வயதானவர்" என்று இன்ஸ்டாகிராமில் தனது மகளின் படத்தைப் பகிர்ந்துக் கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்தியிருப்பதுடன், அரின் ரொம்ப க்யூட்டாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அசின் மகளின் பெயர் அரின் ரயின். இரண்டுமே அசின் மற்றும் ராகுல் பெயரை சேர்த்து வைக்கப்பட்டது தான். இந்த விளகத்தை அரினின் மூன்றாவது பிறந்தநாளின் போது தெரிவித்திருந்தார் அசின். தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துக் கொள்ளாத அசின், மகள் குறித்த விஷயங்களை மட்டுமே பகிர்ந்துக் கொள்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: