முயற்சிகளை மட்டம் தட்டி, அவமானப்படுத்தி முதுகில் குத்துவார்கள் - நடிகர் அஸ்வின் பகீர் பதிவு

சுஷாந்த் சிங்கின் மரணத்தை அடுத்து கடந்த ஒரு வாரகாலமாகவே பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்தை முன் வைத்து வரும் நிலையில் நடிகர் அஸ்வின், அபய் தியோலின் கருத்தை மேற்கோளிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

முயற்சிகளை மட்டம் தட்டி, அவமானப்படுத்தி முதுகில் குத்துவார்கள் - நடிகர் அஸ்வின் பகீர் பதிவு
நடிகர் அஸ்வின்
  • Share this:
இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை பாலிவுட் உலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் துறையில் நிலவும் அரசியல், பாரபட்சம், அவர்கள் சந்தித்த மோசமான அனுபவங்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகர் அபய் தியோல் விருது வழங்கும் நிகழ்ச்சியில் காட்டிய பாரபட்சம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவு வைரலானதை அடுத்து அதை மேற்கோள் காட்டி நடிகர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில் நடிகர் அஸ்வின் கூறியிருப்பதாவது, “ஒருவரை ஓரம் கட்டுவதோ அல்லது அற்பமாக நினைப்பதன் மூலமோ இதுதான் உங்கள் இடம் என பாடம் புகட்ட நினைப்பது, அல்லது அற்பமாக நினைப்பது அல்லது கண்டுகொள்ளாமல் விடுவதன் மூலம் வேறு ஒருவரை பீடத்தில் அமரவைக்கும் நிகழ்வுகள் நடைபெறுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுவரும் நிலையில், அபய்தியோல் பதிவைப் படித்து, எல்லா மட்டங்களிலும் இதுநடைபெறுகிறது என்று நான் உணர்ந்தேன்.


வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆணிக்கும் சுத்தியல் தேவைப்படுகிறது. இறுதியில் வெளியாள் ஒருவர் கொண்டாடப்படுகிறார். எப்போது அவர்கள் வெற்றியாளராக இருக்கிறாரோ அப்போது கடவுள் போல நடத்தப்படுகிறார். உழைப்பு உயர்வைத் தரும் என்பது வழக்கமான கதை. எப்போது முடிவு வெற்றியாக வருகிறதோ அப்போதுதான் கொண்டாடப்படுவார்கள். வாசுகி பாஸ்கருடன் பேசும்போது, கடந்த வருடங்களில் நான் எவ்வளவு தேக்கி வைத்திருக்கிறேன் என்று மதிப்பீடு செய்துகொள்கிறேன்.உங்கள் முயற்சியை மக்கள் புறக்கணிக்கிறார்களோ அல்லது ஒதுக்கிறார்களோ உங்களை காயப்படுத்துகிறார்களோ, உங்கள் முதுகில் குத்துகிறார்களோ அவர்கள் விரும்புவதை அவர்கள் செய்யட்டும்.

என்னை ஒதுக்க நினைக்கும் புதுப்புது முயற்சிகளைப் பார்த்து நான் எதுவும் எதிர்வினையாற்றுவதில்லை என்றாலும், அனைவரையும் ஒரே மாதிரியான மரியாதையுடன் நடத்த மக்கள் முயல வேண்டும். ஒருவரை மட்டமாக நடத்திவிட்டு பின்பு அவரை கடவுளாக்குவதற்குப் பதிலாக ஒரு மனிதரை, மனிதராக நடத்த வேண்டும். நீங்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா அப்படி” இவ்வாறு நடிகர் அஸ்வின் பதிவிட்டுள்ளார்.
First published: June 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading