ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் சேதுபதி வெளியிட்ட அசோக் செல்வனின் ‘வேழம்’ பட ட்ரெய்லர்

விஜய் சேதுபதி வெளியிட்ட அசோக் செல்வனின் ‘வேழம்’ பட ட்ரெய்லர்

வேழம் படத்தின் போஸ்டர்

வேழம் படத்தின் போஸ்டர்

Vezham Trailer : அறிமுக இயக்குனர் ஷியாம் சந்தீப் வேழம் படத்தை இயக்கியுள்ளார். க்ரைம் த்ரில்லர் சஸ்பென்ஸ் ஜேனரில் வேழம் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள வேழம் படத்தின் ட்ரெய்லரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

டிவோ மியூசிக் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த ட்ரெய்லர் ரசிகர்களின கவனத்தை பெற்று வருகிறது. வேழம் படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஜனனி, ஐஷ்வர்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குனர் ஷியாம் சந்தீப் வேழம் படத்தை இயக்கியுள்ளார். க்ரைம் த்ரில்லர் சஸ்பென்ஸ் ஜேனரில் வேழம் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - இன்னொரு செட்டில்மென்ட்! லோகேஷுக்கு Lexus சொகுசு காரை பரிசளித்த கமல்…

நடப்பாண்டில் மட்டும் அசோக் செல்வன், சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், அசோக வனம்லோ அர்ஜுனா கல்யாணம், வேழம், நித்தம் ஒரு வானம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க - கமல்ஹாசனின் விக்ரம் படம் தமிழகத்தில் இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

வேழம் படத்தில் ராஜா கிருஷ்ணமூர்த்தி, சங்கிலி முருகன், மராத்தி நடிகர் மோகன் ஆகாஷே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க - இந்த ஹிட் பாடல்களை எழுதியது விக்னேஷ் சிவனா? இளம் இயக்குனரின் இன்னொரு பக்கம்

ஒளிப்பதிவு சக்தி அரவிந்த், எடிட்டிங் ஏகே பிரசாத், இசை ஆர் ஜானு செய்துள்ளனர். வேழம் படம் ஜூன் 24-ம்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ட்ரெய்லரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

ட்ரெய்லரைப் பார்க்க... 

' isDesktop="true" id="756649" youtubeid="DAuJDUP3UC8" category="cinema">

வேழம் படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழை அளித்துள்ளது.

Published by:Musthak
First published:

Tags: Kollywood