முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஷூட்டிங் முடிந்தது... குஷியாக வீடியோ வெளியிட்ட அசோக் செல்வன்!

ஷூட்டிங் முடிந்தது... குஷியாக வீடியோ வெளியிட்ட அசோக் செல்வன்!

படக்குழு

படக்குழு

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். 

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பா.ரஞ்சித் தயாரிப்பில் சாந்தனு, அசோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.  அந்த வரிசையில் தன்னுடைய உதவி இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் புதிய திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

அந்த திரைப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், பிரித்வி பண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.  கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

கிராமபுறங்களில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், அவர்களின் காதல், நட்பு ஆகியவற்றை மையமாக வைத்து அந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.  இதற்கான படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.




 




View this post on Instagram





 

A post shared by Ashok Selvan (@ashokselvan)



ஆனால் படத்தின் தலைப்பை படக்குழுவினர் இன்னும் அறிவிக்கவில்லை. பா. ரஞ்சித் தயாரித்துள்ள இந்த திரைப்படம் அவருடைய பாணியில் சில முக்கிய விஷயங்களை பேசும் என கூறப்படுகிறது.

ஜெயக்குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு சார்பட்டா படத்தின் வசனகர்த்தா தமிழ் பிரபா வசனம் எழுதியுள்ளார்.  அதேபோல 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதி கட்டப் பணிகளை தீவிரப்படுத்த பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

Also read... 'பழைய கதை வேண்டாமே' திருமண வீடியோ ப்ரொமோவில் கண்ணீர் மல்க பேசிய ஹன்சிகா!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Shanthanu, Ashok Selvan, Pa. ranjith