Hostel: ஆண்கள் ஹாஸ்டலில் மாட்டிக் கொள்ளும் பிரியா பவானி சங்கர்

Hostel: ஆண்கள் ஹாஸ்டலில் மாட்டிக் கொள்ளும் பிரியா பவானி சங்கர்

ஹாஸ்டல் ஃபர்ஸ்ட் லுக்

ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் ஹாஸ்டல் என்ற படம் தயாராகிறது. அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கர், சதீஷ், நாசர், முனீஷ்காந்த் உள்ளிட்டவர்கள் இதில் நடிக்கிறார்கள். மலையாளத்தில் வெளியான படத்தின், தமிழ் தழுவல் இது.

  • Share this:
    ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் ஹாஸ்டல் என்ற படம் தயாராகிறது. அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கர், சதீஷ், நாசர், முனீஷ்காந்த் உள்ளிட்டவர்கள் இதில் நடிக்கிறார்கள். மலையாளத்தில் வெளியான படத்தின், தமிழ் தழுவல் இது.

    மலையாளத்தில் 2015-ல் வெளியான படம், அடி கப்பியாரே கூட்டமணி. கப்பியார் என்றால் தேவாலயத்தின் வேலைகளை கவனிப்பவர். தமிழகத்தில் உபதேசி அல்லது டீக்கனார். ஏதாவது அவசர செய்தி என்றால் மக்களை ஒன்று திரட்ட கோயில் மணியை தொடர்ச்சியாக அடிப்பார்கள். அதற்கு பெயர் கூட்டமணி.

    ஆண்கள் மட்டுமே வசிக்கும் கல்லூரி ஹாஸ்டல் ஒன்றில் நாயகி, அந்த ஹாஸ்டலில் தங்கியிருக்கும் நாயகனின் உதவியுடன் உள்ளே வருகிறாள். இரவே திரும்பிவிடுவது நோக்கம். ஆனால், அசந்து தூங்கிப் போய் ஹாஸ்டலில் மாட்டிக் கொள்கிறாள். மறுநாள் காலையும் அவளால் வெளியேற முடியவில்லை. அதற்குள் கல்லூரி ஸ்டிரைக் என்று விடுமுறை விட, அனைத்து மாணவர்களும் ஹாஸ்டலுக்கு வந்துவிடுகிறார்கள். அன்றிரவும் நாயகி ஹாஸ்டலில் தங்க வேண்டியதாகிறது. நாயகனின் நண்பர்கள் அவளை மறைத்து வைக்க உதவுகிறார்கள். அன்றிரவும் நாயகியால் வெளியேற முடியாமல் போகிறது. அதேநேரம், வெளியே நாயகியின் தந்தை வெறிகொண்டு மகளை தேடிக் கொண்டிருக்கிறார்.

    முழுக்க நகைச்சுவையில் தயாரான இந்தப் படத்தில் நாயகியாக நமிதா பிரமோத்தும், நாயகனாக தயன் ஸ்ரீனிவாசனும், நண்பர்களாக அஜு வர்க்கீஸ் மற்றும் நீரஜ் மாதவும் நடித்திருந்தனர். கண்டிப்பான ஹாஸ்டல் வார்டன் ஃபாதர் ஆல்ஃபிரட் காட்டுவிளையில் கதாபாத்திரத்தில் முகேஷ் நடித்திருந்தார்.

    இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்வதாக ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்தே கூறி வருகிறார்கள். ஆனால், இப்போது தான் நடந்திருக்கிறது. ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் இந்த ரீமேக்கை தயாரிக்க, அசோக்செல்வன், ப்ரியா பவானி சங்கர், சதீஷ் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். போபோ சசி படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    படத்தின் பர்ஸ்ட் லுக்கை நேற்று மாலை வெளியிட்டுள்ளனர்.





    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: