ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அதிக ஹீரோயின்கள் வேணும் என அடம் பிடித்தேனா...? அசோக் செல்வன் விளக்கம்!

அதிக ஹீரோயின்கள் வேணும் என அடம் பிடித்தேனா...? அசோக் செல்வன் விளக்கம்!

அசோக் செல்வன்

அசோக் செல்வன்

நித்தம் ஒரு வானம் படம் வரும் நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தான் 3 கதாநாயகிகள் வேண்டும் என அடம் பிடித்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை என நடிகர் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.

    இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் அறிமுகமான அசோக் செல்வன், தொடர்ந்து பீட்சா 2, தெகிடி, ஓ மை கடவுளே ஆகியப் படங்களில் கவனம் பெற்றார். தற்போது நித்தம் ஒரு வானம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெயின்மெண்ட், வயாகாம் 18 இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ரா.கார்த்திக் இயக்கியுள்ளார். இதில் ரித்துவர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவதா, சிவாத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இசையமைக்க, விது அய்யனா இப்படத்திற்கு படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    சென்னை, சண்டிகர், மணலி, கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் கொல்கத்தா என உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்த நிலையில், படம் வரும் நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்துப் பேசிய அசோக் செல்வன், “நான் காதல் கதையம்சம் உள்ள படங்களில் நிறைய நடித்து விட்டேன். எனவே காதல் படங்களில் நடிப்பதை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்தேன்.

    7 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வரும் விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் ’நித்தம் ஒரு வானம்’ கதையை சொன்னதும் பிடித்துப்போனதால் ஒப்புக்கொண்டேன். இதில் 3 கதைகள் மற்றும் எனக்கு வித்தியாசமான 3 தோற்றங்கள் உள்ளன. எனக்கு கொங்கு மண்டல மக்கள் பேசும் மொழி சாயலில் பேசி நடிக்க ஆர்வம் இருந்தது. அது இந்த படத்தில் நிறைவேறி உள்ளது. எனது படங்களில் 2 அல்லது 3 கதாநாயகிகள் இருந்தால் தான் நடிப்பேன் என்று இயக்குனரை நான் நிர்ப்பந்திப்பதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. அது தானாக அமைந்துவிடுகிறது. ஓ மை கடவுளே படத்தின் 2-ம் பாகத்தை வாய்ப்பு அமையும்போது எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema