• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சிவகார்த்திகேயனின் இருமொழிப் படம் புதிய தகவல்கள்...!

சிவகார்த்திகேயனின் இருமொழிப் படம் புதிய தகவல்கள்...!

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

அசோக் என்பவர் இயக்கத்தில் சிங்கப்பாதை என்ற படத்திலும், தெலுங்குப்பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சிவகார்த்திகேயன் நடித்து வந்த டான் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் அவர் அடுத்து எந்தப் படத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஜினி, விஜய், அஜித், சூர்யாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறhர் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் தமிழக திரையரங்குகளில் 70 கோடிகளை வசூலித்துள்ளது. உலக அளவில் 100 கோடிகளை தாண்டியதாக தகவல். மாஸ் நடிகர்களின் படங்கள் மட்டுமே இப்படி சாதித்திருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து டான் படம் தயாராகியுள்ளது. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை லைகா தயாரித்துள்ளது. இது தவிர அயலான் படம் பல வருடங்களாக அண்டர்புரொடக்ஷனில் உள்ளது. அதன் தயாரிப்பு நிறுவனமான 24 ஏஎம் ஸ்டுடியோஸின் கடன்கள் மற்றும் படத்தின் பட்ஜெட் காரணமாக அயலான் இன்னும் அருகாமையை எட்டாமலே உள்ளது.

டான் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கும் பேசி முடித்துவிட்டார் சிவகார்த்திகேயன். அடுத்து அசோக் என்பவர் இயக்கத்தில் சிங்கப்பாதை என்ற படத்திலும், தெலுங்குப்பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கிறார். அனுதீப் படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராக உள்ளது. இந்தப் படத்துக்காக சிவகார்த்திகேயனுக்கு 25 கோடிகள் சம்பளம் பேசப்பட்டுள்ளது.

Also read... தமன்னா, ஸ்ருதிக்கு கட்அவுட்... அமலா பாலுக்கு கெட்அவுட்டா...?

இந்த இரு மொழிப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். படத்துக்கு இசை தமன். படப்பிடிப்பு எப்போது தொடங்கும் உள்ளிட்ட பிற விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: