• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விருமன் படப்பிடிப்பை பிரகாஷ்ராஜ் ஏன் தவிர்த்தார்?

விருமன் படப்பிடிப்பை பிரகாஷ்ராஜ் ஏன் தவிர்த்தார்?

பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜ் ஆந்திரா நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தல் அக்டோபர் 10 ஆம் தேதி நடக்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
விருமன் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்த பிரகாஷ்ராஜ், அதன்படி படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. அதனால், பாதி ஷெட்யூல்டோடு விருமன் டீம் சென்னை திரும்பியது. இந்தத் தகவலை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். தற்போது அதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

கொம்பன் வெற்றிக்குப் பின் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் விருமன். இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி இதில் நாயகியாக அறிமுகமாகிறார். செப்டம்பர் 6 தேதி படத்தின் பூஜையை போட்டு, செப்டம்பர் 18 ஆம் தேதி தேனியில் படப்பிடிப்பை தொடங்கினர்.

நீண்ட ஷெட்யூல்டாக திட்டமிட்டிருந்த நிலையில், சில தினங்களிலேயே படப்பிடிப்பை முடித்து சென்னைக்கு பேக்கப்பானது விருமன் டீம். பிரகாஷ்ராஜ் கொடுத்த கால்ஷீட்டின்படி படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததே காரணம் என கூறப்பட்டது. இதேபோல் ஹரியின் யானை படத்துக்கும் பிரகாஷ்ராஜ் ஆப்சென்டாக, அவருக்குப் பதில் சமுத்திரகனியை வைத்து படத்தை எடுத்து வருகிறார் ஹரி.

பிரகாஷ்ராஜ் ஆந்திரா நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தல் அக்டோபர் 10 ஆம் தேதி நடக்கிறது. அவருக்கு எதிராக மோகன் பாபுவின் மகன் நிற்கிறார்.

Also read... Lift Review: எப்படி இருக்கிறது கவினின் ‘லிப்ட்’ திரைப்படம்?

இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தல் வேலை காரணமாகவே பிரகாஷ்ராஜ் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. தேர்தல் முடிந்த பின் விருமன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறியுள்ளார்

இதனால், அக்டோபர் 15 முதல் மீண்டும் விருமன் படப்பிடிப்பை தொடர முடிவு செய்துள்ளனர். அப்போது படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக பிரகாஷ்ராஜ் உறுதி அளித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விருமனை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: