திருமணத்துக்கு பின் த்ரிஷாவுக்கு வாழ்த்து... அந்த வார்த்தையை வைத்து கலாய்த்த சதீஷ்!

news18
Updated: May 4, 2019, 6:01 PM IST
திருமணத்துக்கு பின் த்ரிஷாவுக்கு வாழ்த்து... அந்த வார்த்தையை வைத்து கலாய்த்த சதீஷ்!
சதீஷ் | ஆர்யா
news18
Updated: May 4, 2019, 6:01 PM IST
த்ரிஷாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்ன ஆர்யாவை கிண்டலடித்துள்ளார் நகைச்சுவை நடிகர் சதீஷ்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் புதுபுது நாயகிகள் அறிமுகமாகும் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையின் சராசரி ஆயுற்காலம் மூன்று ஆண்டுகள் என சுருங்கிவிட்டது.

ஆனால் இதே துறையில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் முன்னணி நாயகியாகவே வலம்வந்து 100 ஆண்டுகால தமிழ் சினிமாவின் ஆச்சரிய நாயகியாக வலம்வருகிறார் த்ரிஷா.

1999-ம் ஆண்டு மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் போன்ற போட்டிகளில் வெற்றிபெற்ற த்ரிஷா, ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக கூட்டத்தில் வந்துபோகும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன்பின் லேசா லேசா, மௌனம் பேசியதே படங்களின் மூலம் வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமான அவர், சாமி, கில்லி என அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக உயர்ந்தார்.ரஜினி, கமல், விஜய், அஜித்தில் தொடங்கி சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என இன்றைய தலைமுறை நடிகர்கள் என முன்னணி நாயகர்களுடன் நடித்த ஒரே நடிகை எனும் சிறப்பு அந்தஸ்து த்ரிஷாவுக்கு உண்டு.

ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற த்ரிஷாவின் நீண்ட நாள் கனவும் அண்மையில் வெளியான பேட்ட படத்தின் மூலம் நிறைவேறியது.

Petta - Rajinikanth, Trisha

அறிமுகமான ஆண்டில் இருந்து சராசரியாக வருடத்திற்கு நான்கு படங்கள் என நடித்துவந்த த்ரிஷாவின் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான தூங்காவனம் 50-வது படமாக வெளிவந்தது. ஒரு நாயகி 50 படங்களில் நடிப்பது என்பதே தமிழ் சினிமாவில் ஆச்சரியமான ஒரு விஷயம்.

ஆனால் 50- வது படம் நடிக்கும்போதும் த்ரிஷா முன்னணி நாயகியாகவே இருந்தது கூடுதல் ஆச்சரியமான ஒன்றாகும்.

த்ரிஷாவின் 36-வது பிறந்தநாளான இன்று அவர் நடித்த 60-வது படமான பரமபதம் விளையாட்டு ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. திரைத்துறை பிரபலங்கள் பலரும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் ஆர்யா, த்ரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் திருமணத்துக்கு பின்னர் ஒருவார்த்தையை சொல்லாமல் தவிர்த்திருப்பதாக நகைச்சுவை நடிகர் சதீஷ் கூறியுள்ளார்.அந்தவார்த்தை என்னவாக இருக்கும் என்பதை கமெண்டில் தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள். அதில் ஒருவர் டார்லிங் என்பதுதான் அந்த வார்த்தையா என்று நடிகர் சதீஷிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த நடிகர் சதீஷ் அந்த வார்த்தை டார்லிங் அல்ல என்று கூறியுள்ளார்.

இதையடுத்து குஞ்சுமணி என்பதுதான் அந்தவார்த்தை என்ற முடிவுக்கு வந்துள்ளனர் நெட்டிசன்கள்.

வீடியோ பார்க்க: வசீகர நாயகி | த்ரிஷா கடந்து வந்தபாதை

First published: May 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...