Home » News » Entertainment » CINEMA ARYA VISHAL MOVIE TITLED AS ENEMY MSB

இதுதான் இறுதி... எனது நண்பர் ஆர்யா இப்போது எனிமி ஆனார் - விஷால்

ஆர்யா - விஷால் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் இறுதி... எனது நண்பர் ஆர்யா இப்போது எனிமி ஆனார் - விஷால்
விஷால் - ஆர்யா
  • Share this:
அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் அடுத்ததாக ஆரயா - விஷால் நடிக்கும் திரைப்படத்தை இயக்குகிறார். மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘எனிமி’ என்று டைட்டில் வைத்திருக்கிறது படக்குழு.

ஆர்.டி.ராஜேசகர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இந்தப் படத்தில் நடிக்க டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் விஷாலுக்கு ஜோடியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 6-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆர்யா - விஷால் இருவருமே நெருங்கிய நண்பர்கள். ஏற்கெனவே இயக்குநர் பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் இணைந்து நடித்திருந்த இந்தக் கூட்டணி 9 வருடங்களுக்குப் பின் மீண்டும் ‘எனிமி’ படத்தில் இணைந்துள்ளது. மேலும் ஆர்யாவுக்கு இது 32-வது படமாகவும், விஷாலுக்கு 30-வது திரைப்படமாகவும் அமைந்திருக்கிறது.


படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டு ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் ஆர்யா, எப்போதும் நண்பர்களாகவே இருக்க முடியாது. நீ என் எதிரிடா. உண்மையிலேயே எனது எனிமியை எதிர்கொள்ள ஆவலாக உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.



அதேபோல் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பதிவில், இதுதான் இறுதி. எனது நண்பர் ஆர்யா இப்போது எனிமி ஆனார். இந்த போரில் அவரை எதிர்த்துப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. இது சூப்பராக இருக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
First published: November 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading