முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆர்யா நடிக்கும் கேப்டன் படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியானது… புதிய கதைக்களத்தால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ஆர்யா நடிக்கும் கேப்டன் படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியானது… புதிய கதைக்களத்தால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு

கேப்டன் படத்தின் போஸ்டர்.

கேப்டன் படத்தின் போஸ்டர்.

Captain Trailer : ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் திங் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. கேப்டன் படத்தை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழில் இந்த படம் புதிய கதைக் களம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜோம்பி படமான மிருதன், விண்வெளி அறிவியல் படமான டிக்டிக், நாய்கள் ஜாக்கிரதை, டெடி படங்களின் வரிசையில் இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் கேப்டன் படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தில் ஆர்யா, சிம்ரன், ஐஷ்வர்ய லட்சுமி,ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆக்சன் சயின்ஸ் த்ரில்லர் ஜேனரில் உருவாகியுள்ள கேப்டன் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வெற்றிச் செல்வன் என்ற கேரக்டரில் ஆர்யா நடித்துள்ளார்.

ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது… இன்று முதல் ஷூட்டிங்

ராணுவ ஆபரேஷன்கள், ஏலியன்ஸ், ஃபாரெஸ்ட் அட்வென்ச்சர் உள்ளிட்ட சுவாரசியமான விஷயங்கள் கேப்டன் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. கிராஃபிக்ஸ் காட்சிகள் சில பலவீனமாக காணப்பட்டாலும், தமிழில் ஏலியன்ஸ் சப்ஜெக்ட் புதிய கதைக்களம் என்பதால் கேப்டன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

' isDesktop="true" id="789815" youtubeid="93Pu7MoKVQk" category="cinema">

Predator படத்தின் சாயலில் கேப்டன் உருவாக்கப்பட்டிருக்கலாம் என ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் கமென்ட் செய்துள்ளனர். இந்த படத்தை அடுத்த மாதம் 8ம் தேதி வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் திங் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. கேப்டன் படத்தை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

ஹீரோயினாக அறிமுகமாகும் அஜித் படங்களின் குழந்தை நட்சத்திரம்…

கேப்டன் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு எஸ்.யுவா. எடிட்டிங் பிரதீப் ஈ ராகவ். இந்த படத்தை அடுத்த மாதம் 8ம் தேதி வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

First published:

Tags: Actor Arya