காதலர் தினத்தில் திருமண தேதியை அறிவித்த ஆர்யா - சாயிஷா: வாழ்த்து சொன்ன அட்லீ

ஆர்யா - சாயிஷா ஜோடிக்கு விஜய் பட இயக்குநர் அட்லீ வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

காதலர் தினத்தில் திருமண தேதியை அறிவித்த ஆர்யா - சாயிஷா: வாழ்த்து சொன்ன அட்லீ
நடிகர் ஆர்யா - சாயிஷா சைகல்
  • News18
  • Last Updated: February 14, 2019, 12:16 PM IST
  • Share this:
காதலர் தினமான இன்று தங்களது காதலை உறுதி செய்து திருமண நாளையும் அறிவித்துள்ளனர் நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா.

2005-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஆர்யா. நடிகைகளால் பிளேபாய் என்று அழைக்கப்படும் ஆர்யா அவ்வப்போது கிசுகிசுக்களிலும் சிக்கிக் கொள்வார். இளம் பெண்களுக்குப் பிடித்த நடிகர் என்பதே ஆர்யாவின் மிகப்பெரிய பலம்.

இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான கஜினிகாந்த் படத்தில் நடித்த போது சாயிஷாவுடன் காதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து இருவரும் மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு இருவர் தரப்பிலும் விளக்கம் அளிக்காத நிலையில் தற்போது தனது திருமணம் குறித்து முதன்முறையாக வாய்திறந்துள்ளார் நடிகர் ஆர்யா.
இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில் தனக்கும் சாயிஷாவுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் மார்ச் மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் காதலர் தினமான இன்று நடிகர் ஆர்யா - சாயிஷா இருவரும் தங்களது காதலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

திருமணத்துக்கு முன்பே கவர்ச்சியில் தூள் கிளப்பும் ஆர்யாவின் காதலி!
ஆர்யா - சாயிஷா ஜோடிக்கு திரைத்துரையினர் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் பட இயக்குநர் அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.நடிகை சாயிஷா பிரபல இந்தி நட்சத்திரங்கள் திலிப் குமார் - சாயிரா பானு தம்பதியின் பேத்தி. ஆர்யா - சயிஷா இருவரும் இஸ்லாமியச் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது? - வீடியோ

First published: February 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்