திருமணத்தில் ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடிய ஆர்யா - சாயிஷா!

சங்கீத் நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஆர்யா - சாயிஷா திருமணம் இஸ்லாமிய முறைப்படி நேற்று நடந்தது.

news18
Updated: March 15, 2019, 3:55 PM IST
திருமணத்தில் ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடிய ஆர்யா - சாயிஷா!
ஆர்யா - சாயிஷா
news18
Updated: March 15, 2019, 3:55 PM IST
திருமணத்தின் போது ரவுடி பேபி பாடலுக்கு ஆர்யா - சாயிஷா இருவரும் நடனமாடி அசத்தியுள்ளனர். அந்த வீடியொ இணையத்தில் வைரலாகியுள்ளது.

2005-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஆர்யா. நடிகைகளால் பிளேபாய் என்று அழைக்கப்படும் ஆர்யா அவ்வப்போது கிசுகிசுக்களிலும் சிக்கிக் கொள்வார். இளம் பெண்களுக்குப் பிடித்த நடிகர் என்பதே ஆர்யாவின் மிகப்பெரிய பலம்.

இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான கஜினிகாந்த் படத்தில் நடித்த போது ஆர்யா - சாயிஷா இடையே காதல் மலர்ந்தது.இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் காதலர் தினத்தன்று இருவரும் தங்களது காதலை உறுதி செய்தனர். கடந்த 9-ம் தேதி மாலை ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் ஆர்யா - சாயிஷாவின் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது.நடிகை சாயிஷா பிரபல இந்தி நட்சத்திரங்கள் திலிப் குமார் - சாயிரா பானு தம்பதியின் பேத்தி என்பதால் இந்தி திரையுலக பிரபலங்களும் சங்கீத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த வகையில் நடிகர் சஞ்சய்தத், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்குபெற்ற புகைப்படங்களும் வெளியாகின.
Loading...


சங்கீத் நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஆர்யா - சாயிஷா திருமணம் இஸ்லாமிய முறைப்படி நேற்று நடந்தது. இதில் நடிகர் அல்லு அர்ஜூன், சூர்யா, விஷால் , ராணா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தனஞ்செயன் உட்பட பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண நிகழ்வில் நடிகர் ஆர்யா - சாயிஷா இருவரும் ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வரும் 14-ம் தேதி சென்னையில் ஆர்யா - சாயிஷா திருமண வரவேற்பு நடைபெற உள்ளது.

மகன் திருமண நிகழ்ச்சியில் நிடா அம்பானி நடனம்...! - வீடியோ

First published: March 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...