முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிம்பு பட நாயகியுடன் ஜோடி சேரும் ஆர்யா! தொடங்கியது புதிய படம்!

சிம்பு பட நாயகியுடன் ஜோடி சேரும் ஆர்யா! தொடங்கியது புதிய படம்!

ஆர்யா - சித்தி இத்னானி

ஆர்யா - சித்தி இத்னானி

முத்தையாவின் முந்தைய திரைப்படங்கள் போல கிராமத்து பின்னணியில், உறவுகளின் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆர்யா நடிக்கும் 34-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

விருமன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் முத்தையா ஆர்யா நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறார்.  இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பூஜையுடன் படத்தை தொடங்கியுள்ளனர்.

ஆர்யா - முத்தையா கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் நாயகி சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார். அதேபோல் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

ஆர்யாவின் புதிய திரைப்படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்த திரைப்படமும் முத்தையாவின் முந்தைய திரைப்படங்கள் போல கிராமத்து பின்னணியில், உறவுகளின் முக்கியத்துவம்  கொடுக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'தொடங்கவே இல்லை.. அதற்குள் வைரல்'.. பிக்பாஸ் எண்ட்ரியா ஜனனி? இன்ஸ்டாவை மொய்க்கும் ரசிகர்கள்!

ஆர்யா நடிப்பில் இறுதியாக வெளியான கேப்டன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை.

இதனால் முத்தையா திரைப்படம் தனக்கு வெற்றியை கொடுக்கும் என ஆர்யா நம்புகிறார்.

ஏலத்துக்கு வரும் ஸ்ரீதேவியின் புடவைகள்! ஏழை சிறுமிகளுக்காக இயக்குநரின் முன்னெடுப்பு!

top videos

    படப்பிடிப்பு வெகு சில நாட்கள் மட்டும் சென்னையில் நடைபெறுகிறது. அதன் பிறகு தென் மாவட்டங்களில் நடைபெறும் என கூறப்படுகிறது. முத்தையா இயக்கத்தில் இறுதியாக வெளியான விருமன் திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்தது.

    First published:

    Tags: Actor Arya, Kollywood