Arya: சார்பட்டா கபிலனை அடுத்து இயக்கப் போவது யார் தெரியுமா?

ஆர்யாவுடன் சக்தி செளந்தரராஜன்

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் என இரண்டே படங்கள் தான் இதுவரை தந்துள்ளார் நலன் குமாரசாமி. எனினும் அவர் மீது ரசிகர்களுக்கு பெரும் மரியாதையும், நம்பிக்கையும் உள்ளது.

  • Share this:
    ஆர்யாவின் ஸ்டார் வேல்யூ ஒரே படத்தில் உயரப் பறந்திருக்கிறது. ஆர்யா என்பதைவிட சார்பட்டா கபிலன் என்றால் எளிதில் விளங்குகிறது. அவரது டெடிகேஷனுக்கு கிடைத்த பரிசு இது.

    ஆர்யா நடிப்பில் அரண்மனை 3, எனிமி படங்கள் வெளிவர உள்ளன. இதில் அரண்மனை 3 சுந்தர் சி இயக்கியிருக்கும் ஹாரர் படம். எனிமி விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள படம். ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். இந்தப் படங்களைத் தொடர்ந்து ஆர்யா, நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் இந்தப் படத்தை தயாரிப்பதாகவும் கூறப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சூது கவ்வும், காதலும் கடந்து போகும் என இரண்டே படங்கள் தான் இதுவரை தந்துள்ளார் நலன் குமாரசாமி. எனினும் அவர் மீது ரசிகர்களுக்கு பெரும் மரியாதையும், நம்பிக்கையும் உள்ளது. அதற்கேற்ப, குட்டி ஸ்டோரி ஆந்தாலஜியில் அவர் இயக்கிய குறும்படமே அனைவரையும் கவர்ந்திருந்தது.

    நலன் குமாரசாமி அடுத்து ஆர்யா நடிப்பில் படம் இயக்குவதாக இருந்தது. இதுவொரு சூப்பர் ஹீரோ திரைப்படம். ஆனால், என்ன காரணத்தினாலே படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப்போகிறது. இதனால் ஆர்யா அதற்கு முன்னால் வேறொரு படத்தில் நடிக்கிறார். இதனை டெடி படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஆர்யாவின் அடுத்தப் படமாக இது இருக்கும்.

    இந்தப் படத்தை ஆர்யாவே தயாரிக்கிறார் என்பது கூடுதல் செய்தி.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: