• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சொந்தப் படம் தயாரிக்கும் ஆர்யா... இயக்குனர் யார் தெரியுமா?

சொந்தப் படம் தயாரிக்கும் ஆர்யா... இயக்குனர் யார் தெரியுமா?

ஆர்யா

ஆர்யா

நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக், டெடி என படத்துக்குப் படம் வித்தியாசமான ஜானரை தேர்வு செய்யும் சக்தி சௌந்தர்ராஜன் அடுத்து முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் ஒரு படத்தை இயக்குகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சார்பட்டா பரம்பரைக்கு அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பது என்பதை முடிவு செய்துள்ளார் ஆர்யா. இந்தப் படத்தை அவரே சொந்தமாக தயாரிக்கிறார். 

மகாமுனிக்குப் பிறகு பெயர் சொல்லும் அளவுக்கு படங்கள் இல்லாமலிருந்த ஆர்யாவை ஆகாயத்தில் உயர்த்தியது சார்பட்டா பரம்பரை. ஒரே படத்தில் ஆர்யாவின் ஸ்டார் இமேஜும் உயர்ந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்து அவர் யார் தயாரிப்பில், இயக்கத்தில் நடிப்பார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். தற்போது முடிவு தெரிந்திருக்கிறது. டெடி படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கிறார்.

Also read... இடி முழக்கம் ஜீ.வி.பிரகாஷுக்கு விருது வாங்கித் தரும் - சீனுராமசாமி!

நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக், டெடி என படத்துக்குப் படம் வித்தியாசமான ஜானரை தேர்வு செய்யும் சக்தி சௌந்தர்ராஜன் அடுத்து முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் ஒரு படத்தை இயக்குகிறார். ஆர்யாதான் நாயகன். படத்தின் கதைப் பிடித்துப்போய் ஆர்யாவே படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார். சத்யம் குரூப் ஆப் தியேட்டர்ஸ் ஆர்யாவுக்கு பைனான்ஸ் செய்வதாக கேள்வி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: