முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகர் ஆர்யா – முத்தையா இணையும் படத்தின் ஷூட்டிங் நாளை தொடக்கம்…

நடிகர் ஆர்யா – முத்தையா இணையும் படத்தின் ஷூட்டிங் நாளை தொடக்கம்…

இயக்குனர் முத்தையா - ஆர்யா

இயக்குனர் முத்தையா - ஆர்யா

இந்தப் படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அது நடக்கவில்லை

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆர்யா - முத்தையா இணையும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நாளை தொடங்குகிறது.

விருமன் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் முத்தையா, ஆர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கான முதற்கட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு தயாராகியுள்ளனர்.  அதுவும் நாளை முதல் படத்தை பூஜையுடன் தொடங்குகின்றனர்.  இதற்கான விழா சென்னையில் நடைபெறுகிறது. மேலும் நாளை தொடங்கும் படப்பிடிப்பு வெகு சில நாட்கள் மட்டும் சென்னையில் நடைபெறுகிறது.

ரூ. 6 கோடிக்கு விற்பனையான ‘மாவீரன்’ படத்தின் பாடல் வெளியீட்டு உரிமை…

அதன் பிறகு தென் மாவட்டங்களில் நடைபெறும் என கூறப்படுகிறது. முத்தையா இயக்கத்தில் இறுதியாக வெளியான விருமன் திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்தது.

அதேபோல் ஆர்யா நடிப்பில் இறுதியாக வெளியான கேப்டன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை. இதனால் முத்தையா திரைப்படம் தனக்கு வெற்றியை கொடுக்கும் என ஆர்யா நம்புகிறார்.

ஏலத்துக்கு வரும் ஸ்ரீதேவியின் புடவைகள்! ஏழை சிறுமிகளுக்காக இயக்குநரின் முன்னெடுப்பு!

இந்தப் படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அது நடக்கவில்லை. இதனால் யானை படத்தை தயாரித்த Drum Stick நிறுவனம் தயாரிக்கிறது.

First published:

Tags: Actor Arya