பா.ரஞ்சித் உடன் இணையும் ஆர்யா... விளையாட்டை மையப்படுத்தி கதை...!

news18
Updated: September 9, 2019, 5:48 PM IST
பா.ரஞ்சித் உடன் இணையும் ஆர்யா... விளையாட்டை மையப்படுத்தி கதை...!
நடிகர் ஆர்யா
news18
Updated: September 9, 2019, 5:48 PM IST
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, மெட்ராஸ், காலா, கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றி கண்டவர் பா.ரஞ்சித்.

‘காலா’  திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்றும், இத்திரைப்படம், ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக வீரச் சமர் புரிந்த பழங்குடியின போராட்டக்காரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.


ஆனால் இந்தப் படத்துக்கு முன்பாக தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க பா.ரஞ்சித் திட்டமிட்டுள்ளார். அதற்காக குத்துச் சண்டையை மையப்படுத்திய கதையை தயார் செய்திருக்கும் பா.ரஞ்சித் ஆர்யாவுக்கு அந்தக் கதையைக் கூறி அவரது சம்மதத்தையும் பெற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், குரங்கு பொம்மை படத்தைத் தயாரித்த ஸ்ரேயா ஸ்ரீ மூவீஸ் நிறுவனம் ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போட்டோஸ்: ரம்யா பாண்டியனின் கேன்டிட் போட்டோஸை வெளியிட்ட புகைப்பட கலைஞர்!

Loading...Video: CINEMA ROUNDUP | மீண்டும் கைகோர்க்கும் சூர்யா - கெளதம் மேனன்

First published: September 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...