Enemy: கேக் வெட்டி ‘எனிமி’ படப்பிடிப்பை முடித்த ஆர்யா!

Enemy: கேக் வெட்டி ‘எனிமி’ படப்பிடிப்பை முடித்த ஆர்யா!

நடிகர் ஆர்யா

'எனிமி' படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துள்ளார் நடிகர் ஆர்யா. இதனை கேக் வெட்டி படப்பிடிப்புக்குழு கொண்டாடியது.

  • Share this:
    'எனிமி' படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துள்ளார் நடிகர் ஆர்யா. இதனை கேக் வெட்டி படப்பிடிப்புக்குழு கொண்டாடியது.

    மினி ஸ்டுடியோஸ் வினோத் குமார் தயாரிப்பில் பிரமாண்டமாக தயாராகிவரும் படம் எனிமி. அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். அவன் இவன் படத்துக்குப் பிறகு விஷால், ஆர்யா மீண்டும் இதில் இணைந்து நடிக்கின்றனர். நாயகி மம்தா மோகன்தாஸ்,  சிவப்பதிகாரம் படத்தில் ஏற்கனவே விஷாலுடன் நடித்துள்ளார்.



    ஆக்ஷன் படமாக தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாம் அலையிலும் தொடர்ந்து நடந்தது. நேற்றுடன் ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைவடைந்தன. அதனை கேக் வெட்டி கொண்டாடினர் படக்குழுவினர். மேலும் ஆனந்த் சங்கர், விஷால் ஆகியோர் ஆர்யாவுக்கு நன்றி தெரிவித்தனர். பிரகாஷ்ராஜும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    விஷால் நடிப்பில் 2018 மே மாதம் வெளிவந்த இரும்புத்திரை வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளிவந்த சண்டக்கோழி 2, அயோக்யா, ஆக்ஷன், சக்ரா படங்கள் தோல்வியடைந்தன. எனிமி விஷாலின் தொடர் தோல்விகளுக்கு ஸ்பீடு பிரேக் போடும் என்று நம்புகிறார்.

    படத்தை திரையரங்கில் மட்டுமே வெளியிடுவது என தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பது ஆரோக்கியமான விஷயம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: