ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் ஆர்யாவின் ‘டெடி’?

ஆர்யா - சாயிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘டெடி’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் ஆர்யாவின் ‘டெடி’?
டெடி பட போஸ்டர்
  • Share this:
நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டெடி’.

திருமணத்துக்கு பின்னர் ஆர்யா - சாயிஷா நடித்துள்ள முதல் படம் இது. மேலும் இத்திரைப்படத்தில் மகிழ் திருமேனி, கருணாகரன், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் டெடி என்ற பொம்மையும் முழு படத்திலும் பயணிக்கும்படி கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் ஆர்யா - சாயிஷாவின் முதலாம் ஆண்டு திருமணநாளில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கொரோனா ஊரடங்கால் இத்திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர முடியாத சூழ்நிலையில் தற்போது ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருக்கிறது.


கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதலே திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: கொரோனா காலத்தில் தனுஷ் பட இயக்குநர் வீட்டில் நிகழ்ந்த மரணம்

அதேவேளையில் ரிலீசுக்கு தயாராக உள்ள படங்களை கைப்பற்றும் ஓடிடி தளங்கள் டிஜிட்டலில் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் பொன்மகள் வந்தாள், பெண்குயின், யாதுமாகி நின்றாய் படங்களைத் தொடர்ந்து காக்டாயில், டேனி போன்ற படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளன
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading