• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இன்ஸ்டா ஸ்டோரியில் தன் குழந்தையின் பெயரை அறிவித்த நடிகர் ஆர்யா - ரசிகர்கள் வாழ்த்து!

இன்ஸ்டா ஸ்டோரியில் தன் குழந்தையின் பெயரை அறிவித்த நடிகர் ஆர்யா - ரசிகர்கள் வாழ்த்து!

ஆர்யா - சாயிஷா

ஆர்யா - சாயிஷா

நடிகர் ஆர்யா பெயரின் ஆங்கில எழுத்தில் வரும் முதல் எழுத்தான A-வை கொண்டே ஆர்யா - சாயிஷா ஜோடி

  • Share this:
தமிழ் திரைப்பட துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஆர்யா. சமீபத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த சர்பட்டா பரம்பரை திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பாக்ஸிங்கை மையமாக வைத்து வெளியான இந்த படத்தில் நடிகர் ஆர்யாவின் உடல் தோற்றம் அனைவரையும் மிரள வைத்தது. இவர் கடந்த 2019-ம் ஆண்டு திரைப்பட நடிகை சாயிஷாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியாருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் (ஜூலை மாதம்) பெண் குழந்தை பிறந்தது.

2 மாதங்கள் ஆகியும் ஆர்யா - சாயிஷா ஜோடியின் பெண் குழந்தைக்கு என்ன பெயர் வைத்துள்ளார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகாமல் இருந்தது. இவர்களது ரசிகர்கள் புதிய குழந்தையின் பெயர் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள பல நாட்களாக ஆர்வமாக காத்திருந்தனர்.

இதனிடையே உலக மகள்கள் தினம் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில், தனது மகளின் பெயரை வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறார் நடிகர் ஆர்யா. அதன்படி தங்களது மகளுக்கு ‘ஆரியானா’ (Ariana) என்று பெயர் வைத்துள்ளதாக நடிகர் ஆர்யா சோஷியல் மீடியா மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். இதன் பெயரின் பொருள் 'மிகவும் புனிதமானது அல்லது தூய்மையானது' என்று கூறப்படுகிறது.

Also read... ஏன் ஆன்டி இன்டியன் பெயர்? - ப்ளூ சட்டை மாறன் சொன்ன சுவாரஸ்ய விளக்கம்!

நடிகர் ஆர்யா பெயரின் ஆங்கில எழுத்தில் வரும் முதல் எழுத்தான A-வை கொண்டே ஆர்யா - சாயிஷா ஜோடி தங்களது மகளுக்கு பெயர் வைத்துள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. Ariana என்ற பெயர் மாடர்னாகவும், ஸ்டைலிஷாக இருப்பதாகவும் ரசிகர்கள் ஆர்யா - சாயிஷா தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆர்யா வைத்திருந்த இன்ஸ்டா ஸ்டோரியில், தந்தையாகி 2 மாதங்கள் ஆகி விட்டது. இனிய மகள்கள் தின வாழ்த்துக்கள் #Ariana என்று தனது குழந்தைக்கு, மகள்கள் தின வாழ்த்து தெரிவித்து இருந்தார் நடிகர் ஆர்யா. இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.



நடிகர் ஆர்யா நடிப்பில் எனிமி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன. இந்த 2 படங்களும் அடுத்த மாதம் பண்டிகை நாட்களில் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதனிடையே நடிகை சாயிஷாவின் தாய் அதாவது ஆர்யாவின் மாமியார் ஷாஹீன் சோஷியல் மீடியாவில் தனது பேத்தியின் பெயரை வெளிப்படுத்தி உள்ளதோடு, விரைவில் குழந்தையின் ஃபோட்டோக்களை ஷேர் செய்வதாக பதிவிட்டு இருக்கிறார். எனவே ஆர்யாவின் ரசிகர்கள் குழந்தை Ariana-வின் க்யூட் ஃபோட்டோக்களை பார்க்க ஆர்வமாக காத்து கொண்டு இருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

First published: