Home /News /entertainment /

30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - அரவிந்த் சாமி கூட்டணி?

30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - அரவிந்த் சாமி கூட்டணி?

ரஜினிகாந்த் - அரவிந்த் சுவாமி

ரஜினிகாந்த் - அரவிந்த் சுவாமி

1991-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'தளபதி' படத்தில் அரவிந்த் சாமி நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தலைவர் 170 படத்தில் 30 ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்த் - அரவிந்த் சாமி கூட்டணி மீண்டும் இணைந்து நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ பட புகழ் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் தற்போது பிஸியாக இருக்கிறார் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வரும் நிலையில், ரஜினியின் அடுத்தப்படம் குறித்த தகவல் இணையத்தில் வலம் வருகிறது. 'தலைவர் 170' என்று அழைக்கப்படும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறதாம். அதனை ‘டான்’ புகழ் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    என் இதயத்தை திருடியவனே... சீரியல் நடிகை மகாலட்சுமி - ரவீந்தர் சந்திரசேகரன் ரொமாண்டிக் போஸ்ட்!

    உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் கலந்துகொள்ளும் இயக்குநர் மணிரத்னத்தின் பிரம்மாண்டமான படமான 'பொன்னியின் செல்வன்' பாகம் 1-ன் ஆடியோ வெளியீட்டு விழாவில், இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. 'தலைவர் 170' படத்தின் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறாராம். 1991-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'தளபதி' படத்தில் அரவிந்த் சாமி நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கர்மாவுக்கு திருப்பிக் கொடுக்க தெரியும்... ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதோடு, அனிருத்திடம் இந்தப் படத்திற்கு இசையமைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்தப் படத்தை ஏப்ரல் 2023-ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Arvind Swami, Rajinikanth

    அடுத்த செய்தி