விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித்தின் 62-வது படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு, இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளங்களில் "இப்போது AK62 என்ற பெரிய வாய்ப்பில் கவனம் செலுத்துகிறேன்!" என்று தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், தயாரிப்பாளர்கள் படத்தில் நடிக்கும் வில்லனை டிக் செய்துவிட்டதாக தெரிகிறது. ஆம், அஜித்தின் 62-வது படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க அரவிந்த் சாமி அணுகப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“அரவிந்த் சாமி, தனது இரண்டாவது இன்னிங்ஸில், அவர் நடிக்கும் கதாபாத்திரங்களில் இன்னும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த கதாபாத்திரத்திற்கு அரவிந்த் சாமி பொருத்தமானவர் என்று தயாரிப்பாளர்கள் கருதினர். இப்போது அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அவர் அஜித்தின் 62-வது படத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என படத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்துள்ளது.
சுவாரஸ்யமாக, அஜித் மற்றும் அரவிந்த் சாமி கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். இவர்கள் இருவரும் 1994-ல் பாசமலர்கள் திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.
தமிழ்-தமிழ்நாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் தரமான சம்பவங்கள்!
அனிருத் இசையமைக்கும் #AK62 படத்தின் படப்பிடிப்பு பொங்கலுக்குப் பிறகு தொடங்கவுள்ளது. படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடிப்பதாகக் கூறப்பட்டாலும், தயாரிப்பாளர்கள் இன்னும் பெண் கதாபாத்திரத்தை இறுதி செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ajith, Actor Arvind Swami