Home /News /entertainment /

ரஜினிகாந்துடன் நடிப்பதாக வெளியான செய்திக்கு அரவிந்த் சாமியின் ரியாக்‌ஷன்

ரஜினிகாந்துடன் நடிப்பதாக வெளியான செய்திக்கு அரவிந்த் சாமியின் ரியாக்‌ஷன்

ரஜினிகாந்த் - அரவிந்த் சுவாமி

ரஜினிகாந்த் - அரவிந்த் சுவாமி

சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்கரவர்த்தி, அடுத்ததாக ரஜினிகாந்தை இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிப்பது குறித்து அரவிந்த் சாமியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் பதிலளிக்காமல் கடந்து சென்றிருக்கிறார்.

    தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவர் அரவிந்த் சுவாமி. சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவியின் 'தனி ஒருவன்' படத்தில் வில்லனாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார். அவர் அடுத்ததாக 'ரெண்டகம்' என்ற படத்தில் நடிக்கிறார். அவர் ரஜினிக்கு வில்லனாக நடிக்கப் போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அதாவது சிபி சக்கரவர்த்தியுடன் ரஜினிகாந்த் இணையும் படத்தில் அரவிந்த் சாமி எதிர்மறையான பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. தற்போது இது குறித்த கேள்விக்கு பதில் சொல்லாமல் கடந்து சென்றிருக்கிறார் அரவிந்த் சாமி.

    இருப்பினும், நடிகரின் மெளனமே சம்மதம் என ரசிகர்கள் கருதுகின்றனர். 31 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் அரவிந்த் சுவாமியை ஒன்றாகப் பார்க்க ஆர்வமாக உள்ளனர். ரஜினிகாந்த் மற்றும் அரவிந்த் சுவாமி இருவரும் 1991-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய 'தளபதி' என்ற கேங்ஸ்டர் படத்தில் சகோதரர்களாக நடித்தனர்.

    ரசிகையாக இருந்து பெருமைமிகு மனைவியானேன் - ரவீந்தர் குறித்து மகாலட்சுமி நெகிழ்ச்சி!

    சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்கரவர்த்தி, அடுத்ததாக ரஜினிகாந்தை இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வருகிறதாம். ஆரம்பக்கட்ட வேலைகள் முடிந்தவுடன் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மறுபுறம், ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமாருடன் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Arvind Swami, Rajinikanth

    அடுத்த செய்தி