Home /News /entertainment /

அரவிந்த் சாமி நடிக்கும் ரெண்டகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு….

அரவிந்த் சாமி நடிக்கும் ரெண்டகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு….

ரெண்டகம் படத்தில் அரவிந்த் சாமி - குஞ்சாக்கோ போபன்

ரெண்டகம் படத்தில் அரவிந்த் சாமி - குஞ்சாக்கோ போபன்

ரெண்டகம் படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் மூலமாக முன்னணி மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் தமிழில் அறிமுகமாகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள ரெண்டகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    90களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருந்து வந்த நடிகர் அரவிந்த்சாமி, 2000-க்கு பின்னர் பிரேக் எடுத்துக்கொண்டு குறைவான படங்களில் நடித்து வந்தார்.

    2015-ல் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தனிஒருவன் படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்திருப்பார். இதில் ஹீரோவை விடவும் வில்லனாக நடித்த அரவிந்த்சாமிக்கே அதிக வரவேற்பு கிடைத்தது. இது படத்தின் மாபெரும் வெற்றியாக கருதப்பட்டது.

    தனி ஒருவன் படத்திற்கு பின்னர், அரவிந்த்சாமி தொடர்ந்து நடித்து வருகிறார். அடுத்தடுத்து வந்த போகன், செக்க சிவந்த வானம், தலைவி உள்ளிட்ட படங்கள் கவனம் ஈர்த்தன.

    விருமன் வசூலில் இருந்து 25 லட்ச ரூபாயை நடிகர் சங்கத்துக்கு வழங்கிய சூர்யா!

    அரவிந்த்சாமி நடித்துள்ள நரகாசூரன், கள்ளபார்ட், சதுரங்கவேட்டை படத்தின் இரண்டாம் பாகம், வணங்காமுடி ஆகிய படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் மலையாள முன்னணி நடிகர் குஞ்சாக்கோ போபன் உடன், அரவிந்த்சாமி நடித்திருக்கும் ரெண்டகம் படம் செப்டம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இவர்களுடன் ஈஷா ரெபா, ஆடுகளம் நரேன், அனிஷ் கோபால் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இதனை நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் நிறுவனம் தயாரிக்க, டிபி ஃபெல்லினி இயக்கியுள்ளார். அருள் ராஜ் கென்னடி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    ரிலீசுக்கு ரெடி… தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் அடுத்த அப்டேட்

    ரெண்டகம் படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலமாக முன்னணி மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் தமிழில் அறிமுகமாகிறார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Arvind Swami

    அடுத்த செய்தி