Home /News /entertainment /

வரவேற்பை பெறும் அரவிந்த்சாமியின் ரெண்டகம் பட ட்ரைலர்…

வரவேற்பை பெறும் அரவிந்த்சாமியின் ரெண்டகம் பட ட்ரைலர்…

ரெண்டகம்

ரெண்டகம்

ரெண்டகம் படத்தை ஃபெலினி இயக்கியுள்ளார். மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் இந்த படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அரவிந்த்சாமி, மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் முன்னனி கேரக்டர்களில் நடித்துள்ள ரெண்டகம் படத்தின் டிரைலர் வரவேற்பை பெற்று வருகிறது.  இந்தப் படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது.

    இந்த படத்தில் ஈஷா ரெபா, ஜாக்கி ஷெராப், அணிஷ் கோபால், சியாத் யாது உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்ஷன் திரில்லர் ஜானரில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    ரெண்டகம் படத்தை ஃபெலினி இயக்கியுள்ளார். மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் இந்த படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு கேரளாவிலும் நல்ல எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

    இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. ஒரே படத்தில் அறிமுகமாகும் சீரியல் நடிகைகள்!

    மொத்தம் 2 நிமிடங்கள் 3 வினாடிகள் ஓடக்கூடியதாக ரெண்டகம் படத்தின் ட்ரெய்லர் கட் செய்யப்பட்டுள்ளது.  ரெண்டகம் படத்தை நடிகர் ஆர்யா, ஷாஜி நடேசன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.



    கௌதம் சங்கர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அப்பு பட்டதரி எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, அருள்ராஜ் கென்னடி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

    பாடல்களை மைக்செட் ஸ்ரீராம், மணி அமுதவன் ஆகியோர் எழுதியுள்ளனர். வரும் வெள்ளியன்று இந்தப்படம் வெளியாக உள்ளது யூட்யூபில் இந்த ட்ரைலர் 14 லட்சம் பார்வைகளை கடந்து வரவேற்பை பெற்று வருகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Arvind Swami

    அடுத்த செய்தி