Home /News /entertainment /

2022 ஜனவரியில் திரைக்கு வரும் அரவிந்த்சாமி, த்ரிஷாவின் சதுரங்க வேட்டை 2

2022 ஜனவரியில் திரைக்கு வரும் அரவிந்த்சாமி, த்ரிஷாவின் சதுரங்க வேட்டை 2

சதுரங்க வேட்டை 2

சதுரங்க வேட்டை 2

அரவிந்த்சாமி நடிப்பில் நரகாசூரன், வணங்காமுடி போன்ற படங்களும் தயாராகி நீண்ட காலமாக வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
கடந்த நான்கு வருடங்களாக பெட்டிக்குள் இருந்த சதுரங்க வேட்டை 2 2022 ஜனவரியில் திரைக்கு வருவதாக அறிவித்துள்ளனர்.

2014-ல் ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் சதுரங்க வேட்டை வெளியாகி வெற்றி பெற்ற போதே அதன் இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் ஆரம்பமாயின. சதுரங்க வேட்டையை விநியோகித்த திருப்பதி பிரதர்ஸ் சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்தை தயாரிப்பதாக முடிவானது. அந்த நேரம் அவர்கள் பெரும் பொருளாதாரச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ள வினோத், கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்றை இயக்குவதில் தீவிரமானார்.

சதுரங்க வேட்டை 2 படத்தை பலரும் கைவிட்ட நிலையில் சதுரங்க வேட்டையை தயாரித்த மனோபாலா 2016 இல் இரண்டாம் பாகத்தையும்  தயாரிக்க முன்வந்தார்.

அரவிந்த்சாமி, த்ரிஷா நடிப்பில் வினோத்தின் கதைக்கு நிர்மல் குமார் (சலீம் பட இயக்குனர்) திரைக்கதை அமைத்து படத்தை இயக்கினார். 2017 இல் முழு படப்பிடிப்பும் முடிந்து படம் தயாரானது. அதற்குப் பிறகு நான்கு வருடங்களாக பல்வேறு காரணங்களால் படம் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் ஆன்ஸ்கை டெக்னாலஜி முத்து சம்பந்தம் படத்தை வாங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து 2022 ஜனவரியில் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அரவிந்த்சாமி நடிப்பில் நரகாசூரன், வணங்காமுடி போன்ற படங்களும் தயாராகி நீண்ட காலமாக வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. த்ரிஷாவின் கர்ஜனை, ராங்கி படங்களும் இதேபோல் பல வருடங்களாக வெளியீட்டிற்கு காத்திருக்கின்றன. இந்த இருவருக்கும் சதுரங்க வேட்டை 2 வெளியாவது ஆறுதலான நிகழ்வு.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Arvind Swami, Actress Trisha

அடுத்த செய்தி