• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அரவிந்த்சாமி படத்துக்கு டைட்டில் கிடைச்சாச்சு

அரவிந்த்சாமி படத்துக்கு டைட்டில் கிடைச்சாச்சு

ரெண்டகம்

ரெண்டகம்

அரவிந்த்சாமி நடித்திருக்கும் புதிய படத்துக்கு ரெண்டகம் என்று பெயர் வைத்துள்ளனர்.

  • Share this:
அரவிந்த்சாமியின் இரண்டாம் வருகையில் பல நல்ல விஷயங்களும், சில கெட்ட விஷயங்களும் நடந்தன. நல்ல விஷயம், அவர் நடித்த படங்களில் பல வெற்றிகரமாக வெளிவந்தன. கெட்ட விஷயம், சில படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

சதுரங்கவேட்டை 2 படத்தில் த்ரிஷாவுடன் நடித்தார் அரவிந்த்சாமி. படம் முடிந்தும் தயாரிப்பாளர் மனோபாலாவுக்கு ஏற்பட்ட கடன் நெருக்கடியால் படம் இன்னும் வெளியாகவில்லை. அதேபோல் நரகாசூரன். கார்த்திக் நரேன் இயக்கிய இந்தப் படம் பல வருடங்களுக்கு முன் முடிந்தும், படத்தின் முதல் தயாரிப்பாளர் கௌதமின் கடன்கள் காரணமாக இன்னும் வெளியாகவில்லை.

எம்.ஜி.ஆராக அவர் நடித்துள்ள தலைவி படம் இந்த மாதம் வெளியாக வேண்டியது. கரோனா காரணமாக அதன் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர். அதேபோல் வணங்காமுடி படமும் பாதியில் நிற்கிறது. கள்ளபார்ட் படம் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் நிலையில் உள்ளது.

இது தவிர தமிழ், மலையாளத்தில் தயாராகும் படத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இதில் அவருடன் முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் குஞ்சாகாபோபன் நடிக்கிறார். பெல்லினி இயக்கும் இந்தப் படத்துக்கு தமிழில் ரெண்டகம் என்றும் மலையாளத்தில் ஓட்டு என்றும் பெயர் வைத்துள்ளனர். படம் ஏறக்குறைய முடிவடைந்த நிலையில், ஆகஸ்டில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
ரெண்டகத்தின் ஆச்சரிய செய்திகளில் ஒன்று, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: