இந்தியில் ரீமேக்காகும் அருவி! ஹீரோயின் யார் தெரியுமா?

அருவி

இந்தியா மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில் நல்ல விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படத்தில் அதிதி முன்னணி கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

 • Share this:
  தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘அருவி’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  2017 ஆம் ஆண்டில் வெளியான அருவி திரைப்படம் அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றது. அறிமுக இயக்குநர் அருண் பிரபு இயக்கிய அந்தப் படம் நிறைய பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன், லட்சுமி கோபாலசாமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

  Raja Rani 2: புதிய சாதனை படைத்த ராஜா ராணி 2 சீரியல்!

  இந்தியா மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில் நல்ல விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படத்தில் அதிதி முன்னணி கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அவரின் நடிப்பு ரசிகர்களின் மனதைக் கவரும் வகையில் இருந்தது. இப்போது இந்த படம் இந்தி மொழியிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது.

  ’தங்கல்’ படத்தில் நடித்து புகழ் பெற்ற, பாத்திமா சனா ஷேக் இந்தி ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இ.நிவாஸ் இப்படத்தை இயக்குகிறார். அப்லாஸ் என்டர்டெயின்மென்ட் என்ற பேனரின் கீழ் தயாரிக்கப்படும் இப்படத்தை ஃபெய்த் பிலிம்ஸின் விக்கி ரஜனி இணைந்து தயாரிக்கிறார்கள். பாத்திமா தனது புதிய அணியுடன் போஸ் கொடுக்கும் படத்துடன் இந்த அறிவிப்பு வெளியானது. இதனை உறுதிப்படுத்திய அருவி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: