ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மனைவியின் பிரிவை தாங்க முடியாத திரை பிரபலம்.. பிறந்தநாளில் உருக்கம்!

மனைவியின் பிரிவை தாங்க முடியாத திரை பிரபலம்.. பிறந்தநாளில் உருக்கம்!

அருண்ராஜா

அருண்ராஜா

அருண்ராஜா மறைந்த தனது மனவி சிந்துஜாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறார்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  தமிழ் சினிமாவில் பன்முக திறமைகள் கொண்ட கலைஞர்கள் பலர் இருக்கிறார்கள். சிலர் நடிப்போடு சேர்த்து நன்றாக பாடுவார்கள். சில பாடகர்கள் நன்றாக நடிப்பார்கள். சில நன்றாக பாடல்கள் அல்லது கதை வசனம் எழுதி ரசிகர்களை ஈர்ப்பார்கள்.

  அந்த வகையில் தமிழ் திரைப்பட துறையில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், இயக்குனர் என பன்முக திறமைகள் கொண்டவராக இருந்து வருபவர் அருண்ராஜா காமராஜ். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகில் இருக்கும் பேரூர் என்ற ஊரில் 1984-ஆம் ஆண்டு பிறந்தவர் அருண்ராஜா காமராஜ்.

  சந்திரகலா மகள் வசுவால் வீட்டில் வெடிக்கும் மிகப் பெரிய பிரச்சனை!

  இவர் தனது பள்ளிப்படிப்பை குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருச்சி பிஷப் ஹெபேர் மேல்நிலைப்பள்ளியில் முடித்தார். தனது கல்லூரி படிப்பை திருச்சி ஜே. ஜே. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கற்று முடித்தார். அருண்ராஜா காமராஜ் நன்றாக கிரிக்கெட்டும் விளையாடுவார். இவரது கல்லூரி தோழர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து விஜய் டிவி-யில் கலக்க போவது யாரு ஷோவில் பங்குபெற்ற அருண்ராஜா காமராஜ், பின்னர் தனது கனவான வெள்ளித்திரையில் பயணத்தை துவக்கினார்.

  சிவகார்த்திகேயனுடன் ஆரம்ப கட்டத்தில் கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்த இவர் பின் படங்களில் பணிபுரிய ஆரம்பித்தார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சாவில் பாடலாசிரியராக அறிமுகமானார். நகைச்சுவை நடிகராக ஆர்யா நடித்த ராஜா ராணியிலும், பாடகராக ஜிகர்தண்டா படத்திலும் அறிமுகமானார். மான் கராத்தே, பென்சில்,மரகத நாணயம், நட்புன்னா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களில் காமெடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி திரைப்படத்தில் "நெருப்பு டா" பாடலை தானே எழுதி பாடியும் உள்ளார்.

  கண்ணம்மா மீது செம்ம கோபத்தில் பாரதி.. கடைசியில் நடந்த கதையே வேற !

  கனா திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் எழுத்தாளர் அவதாரம் எடுத்தார் அருண்ராஜா காமராஜ். இந்த திரைப்படத்தை இவரது நண்பர் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துவளியிட்டார் . ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இந்த திரைப்படம். வேலைப்பளு இருந்தாலும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த அருண்ராஜா காமராஜ் வாழ்வை புரட்டி போட்டது கோவிட் தொற்று.

  கடந்த ஆண்டு ஒரே நேரத்தில் இவரும், இவரது மனைவி சிந்துஜாவும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி ஒரே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த வருடம் மே 16-ல் தனது மூச்சை நிறுத்தினார் சிந்துஜா. இதனால் மீளா துயரத்தில் ஆழ்ந்தார் அருண்ராஜா காமராஜ். எனினும் உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் அவருக்கு பக்கபலமாக இருந்தனர். தற்போது உதயநிதியை வைத்து நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் அருண்ராஜா.

  சமீபத்தில் சோஷியல் மீடியாவில் போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார் அருண்ராஜா. அதில் மறைந்த தனது மனவி சிந்துஜாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறார். எப்போதும் உன்னை மிஸ் செய்கிறேன், பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பி என்று உருக்கமுடன் கேப்ஷன் கொடுத்து மனைவியின் போட்டோவை ஷேர் செய்து உள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவரது போஸ்ட்டிற்கு கீழே மறைந்த சிந்துஜாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Corona death, Kollywood, Tamil Cinema