Arunraja Kamaraj: கொரோனாவால் மனைவி உயிரிழப்பு - மருத்துவமனையில் அருண்ராஜா காமராஜ்

மனைவி சிந்துஜாவுடன் அருராஜா காமராஜ்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அருண்ராஜாவும், அவரது மனைவி சிந்துஜாவும் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

  • Share this:
    பாடலாசிரியர் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனா தொற்றுக்கு பலியாகியிருக்கும் நிலையில், அவர் தற்போது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்.

    ராஜா ராணி, மான் கராத்தே, மரகத நாணயம், க/பெ.ரணசிங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் அருண்ராஜா காமராஜ், பீட்சா, ஜிகர்தண்டா, காக்கி சட்டை, தெறி, கபாலி, காலா, மாஸ்டர், தர்பார் போன்ற பல படங்களில் பாடலாசிரியராகவும், பாடகராகவும் பணியாற்றியிருக்கிறார்.

    நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அவர், சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் 2018-ல் வெளிவந்த கனா படத்தில் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ’ஆர்டிக்கிள் 15’ படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்.

    இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அருண்ராஜாவும், அவரது மனைவி சிந்துஜாவும் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சிந்துஜா மறைந்திருக்கிறார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அருண்ராஜா சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தந்து, குணமடைந்து வருவதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மனைவியை இழந்த நிலையில் அவரை கடைசியாக பார்க்க முடியாமல் இருக்கும் அருண்ராஜாவின் நிலையை நினைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: