ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட அருண்ராஜா காமராஜ்

இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட அருண்ராஜா காமராஜ்

அருண்ராஜா காமராஜ்

அருண்ராஜா காமராஜ்

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் சினிமாவின் இயக்குனரும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த கனா மற்றும் உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் அருண்ராஜா காமராஜ். இவர் சில திரைப்படங்களில் பாடலும் எழுதியுள்ளார். குறிப்பாக கபாலி திரைப்படத்தில் இடம்பெற்ற நெருப்புடா என்ற பாடலை எழுதி பாடி பிரபலமானார்.

அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா, கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார். அந்த  துக்கத்தில் இருந்து மீண்ட அவர்,  தன்னுடைய அடுத்த படத்தின் வேலைகளில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் அருண்ராஜா காமராஜ் கடந்த 28ஆம் தேதி இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். மிக எளிமையாக நடைபெற்ற அவரின் திருமண விழாவில் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. 

உங்களுக்கு தலை வணங்குகிறேன்... மோடிக்கு நன்றிக்கு சொன்ன விஷால்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தன்னுடைய திருமணம் மற்றும் மனைவி ஆகியோர் பற்றிய அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என கூறப்படுகிறது. 

Published by:Shalini C
First published:

Tags: Ajith