Home /News /entertainment /

அருண் விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் - யானை வெளியீட்டு தேதி அறிவிப்பு!

அருண் விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் - யானை வெளியீட்டு தேதி அறிவிப்பு!

யானை படக்குழுவினர்

யானை படக்குழுவினர்

வழக்கம்போல் தனது எக்ஸ்பிரஸ் வேகத்தில் படத்தை முடித்துள்ளார் ஹரி. இந்தப் படம் மே 6-ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் யானை படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறார்கள்.

அருண் விஜய் நடிப்பில் பார்டர், சினம் ஆகிய படங்கள் தயாராகி வெளியீட்டுக்கு ரெடியாக உள்ளன. ஆனால் அவற்றின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப் போகிறது. இந்தப் படங்களுக்குப் பிறகு அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் யானை. வழக்கம்போல் தனது எக்ஸ்பிரஸ் வேகத்தில் படத்தை முடித்துள்ளார் ஹரி. இந்தப் படம் மே 6-ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

யானை திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், சமுத்திரகனி யோகிபாபு, போஸ் வெங்கட், ராஜேஷ், சஞ்சீவ், அம்மு அபிராமி, ஜெயபாலன், இமான் அண்ணாச்சி, குக் வித் கோமாளி  புகழ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அருண் விஜய்யின் அண்ணன் கதாபாத்திரம் படத்தில் பிரதானமாக வருகிறது. இந்த வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜை ஒப்பந்தம் செய்திருந்தனர். அவர் தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்க தேர்தலில் பிஸியாக இருந்த காரணத்தால் கால்ஷீட் அளித்தபடி படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் அவருக்காக காத்திருக்காமல் அந்த வேடத்தில் சமுத்திரகனியை நடிக்க வைத்தார்கள்.

நான் திமிர் பிடித்தவள் தான்... விமர்சனங்களுக்கு வனிதா விஜயகுமார் பதிலடி

தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் மொத்த படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது ஏற்கனவே பாடல்கள் வெளியான நிலையில் மே 6-ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அருண் விஜய்யின் படம் வெளியாகிறது. அவரது ரசிகர்களுக்கு இது ஹேப்பி நியூஸ்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Arun Vijay

அடுத்த செய்தி