ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

 தள்ளி போகிறதா அருண் விஜய்யின் ‘யானை’ திரைப்படத்தின் வெளியீடு?

 தள்ளி போகிறதா அருண் விஜய்யின் ‘யானை’ திரைப்படத்தின் வெளியீடு?

யானை திரைப்படம்

யானை திரைப்படம்

யானை  திரைப்படத்தில் அருண் விஜய்யுடன் பிரியா பவானி சங்கர், அம்மு அபிராமி,  சமுத்திரகனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றக் கோரி விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் யானை. குடும்ப சென்டிமென்ட் ஆக்ஷன் வகையில் உருவாக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை வரும் 17ஆம் தேதி வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்கான வேலைகளில் தீவிரமாக நடைபெற்று வந்தன. மேலும் அருண் விஜய்,  ஹரி ஆகியோர் கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், மதுரை உள்ளிட்ட ஊர்களில் படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வந்தனர்.

arun vijay yaanai movie yaanai release date maybe postponded please check out the reason here
யானை போஸ்டர்

இந்நிலையில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. அதேபோல் 17-ஆம் தேதி ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள வீட்ல விசேஷம் திரைப்படமும் வெளியாகிறது.  இதற்கும் கணிசமான திரையரங்குகளை ஒதுக்க திட்டமிட்டிருக்கின்றனர்.  இதனால் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் யானை திரைப்படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனமும்,  விநியோகஸ்தர்களும் விரும்புகின்றனர்.  ஆனால் 17ஆம் தேதி யானை திரைப்படம் வெளியானால் குறைவான திரையரங்குகள் கிடைக்கும் சூழல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு! நயன்தாராவின் காதல் டூ கல்யாண கதை..

இதன் காரணமாக யானை திரைப்படத்தை ஜூலை 1ஆம் தேதி வெளியிட விநியோகஸ்தர்களை அப்படத்தின் தயாரிப்பாளரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.  இதற்கான ஆலோசனை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.  மேலும் படத்தின் வெளியீடு 17ஆம் தேதியிலிருந்து ஜூலை 1-ஆம் தேதிக்கு தள்ளி செல்ல அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.  யானை  திரைப்படத்தில் அருண் விஜய்யுடன் பிரியா பவானி சங்கர், அம்மு அபிராமி,  சமுத்திரகனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Sreeja
First published:

Tags: Actor Arun Vijay, Kollywood, Tamil Cinema