ஓடிடி-யில் வெளியாகும் அருண் விஜய் மற்றும் ஷ்ரேயா ரெட்டி படங்கள்

ஓடிடி-யில் வெளியாகும் அருண் விஜய் மற்றும் ஷ்ரேயா ரெட்டி படங்கள்

அருண் விஜய் - ஷ்ரேயா ரெட்டி

திரையரங்குகளில் வெளியாகாத படங்களை கரையேற்றும் படகாக மாறியிருக்கிறது ஓடிடி தளங்கள். விஷால் நடிப்பில் சுந்தர் சி. இயக்கிய மத கஜ ராஜா படம் தயாரிப்பாளரின் கடன் சுமையால் இன்றுவரை வெளியாகவில்லை. அப்படம் விரைவில் ஓடிடியில் ஒளிபரப்பாகிறது.

 • Share this:

  அதேபோல் பல வருடங்களாக பெட்டிக்குள் இருக்கும் அருண் விஜய் படமும், ஸ்ரேயா ரெட்டி படமும் வெளியாக உள்ளது. 2012 இல் ஃபெதர் டச் நிறுவனம் தொடங்கிய படம் ’வா டீல்’. ரத்ன குமார் இயக்கத்தில் அருண் விஜய், கார்த்திகா நடித்தனர், தமன் இசை. படம் முடிந்து பல வருடங்களாகியும் இன்னும் வெளியாகவில்லை.

  இந்நிலையில் ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் பதினைந்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை கொண்டாடும் வகையில் சில படங்களை ஓடிடியில் வெளியிடுகிறது. அதில் ஒன்று வா டீல் திரைப்படம்.

  அவர்கள் வெளியிடும் மற்றொரு திரைப்படம், ’அண்டாவ காணோம்’. 2014-ல் தொடங்கப்பட்ட இந்தப் படத்தில் விஷாலின் அண்ணி ஸ்ரேயா ரெட்டி (திமிரு படத்தில் வில்லியாக நடித்தவர்) கதை நாயகியாக நடித்திருந்தார். கிராமத்து கதையான இதனை தேனியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் படமாக்கியிருந்தனர், வேல்மதி இயக்கம். இந்தப் படத்தையும் ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் வெளியிடுகிறது. இது தவிர இரு புதிய படங்களையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: