ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இயக்குநர் பாலாவின் வணங்கான் படத்தில் நடிக்கவிருப்பது இந்த நடிகரா?

இயக்குநர் பாலாவின் வணங்கான் படத்தில் நடிக்கவிருப்பது இந்த நடிகரா?

இயக்குநர் பாலா

இயக்குநர் பாலா

இந்தப் படத்தை பாலாவே தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அதன் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குனர் பாலா 16 ஆண்டுகளுக்குப் பிறகு வணங்கான் படத்தில் சூர்யாவுடன் இணைந்திருப்பதாக அறிவித்தார். இப்படத்தில் சூர்யா செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுள்ளவராக நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதால், சில வாரங்கள் முன்பு படத்திலிருந்து விலகினார் சூர்யா.

எதிர்காலத்தில் சூர்யாவுடன் இன்னொரு படத்தில் கண்டிப்பாக இணைந்து வேலை செய்வதாக அது தொடர்பான செய்திக்குறிப்பில் தெரிவித்தார் பாலா. "நந்தாவில் நான் பார்த்த சூர்யாவும், பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யாவும் இன்னொரு தருணத்தில் நிச்சயம் இணைவார்கள்" என்று அதில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து வணங்கான் படத்தில் சூர்யாவுக்குப் பதிலாக அதர்வாவை நடிக்க வைக்கவிருப்பதாக யூகங்கள் வெளியான நிலையில், தற்போது அருண் விஜய் நாயகனாக டிக் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்த நடிகரை அணுக முயற்சித்தபோது, ​​பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும், புதிய நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்ததாக டைம் ஆஃப் இந்தியா ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இப்படத்தை தயாரிக்கவிருந்த சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமும் வணங்கான் படத்திலிருந்து விலகியுள்ளது. அதனால் இப்போது, ​​இந்தப் படத்தை பாலாவே தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அதன் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெண் சுதந்திரத்தை அனுபவிக்கணும்... பெரியார் சிந்தனைகளைப் பேசிய இனியா சீரியல் - வரவேற்கும் நெட்டிசன்கள்!

இதற்கிடையில், அருண் விஜய் தற்போது இயக்குநர் நவீனின் அக்னி சிறகுகள் மற்றும் அறிவழகனின் பார்டர் ஆகிய படங்களின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார், மேலும் இயக்குநர் விஜய்யின் அச்சம் என்பது இல்லையே படப்பிடிப்பில் பிஸியாகவும் இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Arun Vijay, Actor Suriya