Home /News /entertainment /

யானை படத்தின் டப்பிங்கை தொடங்கிய அருண் விஜய்!

யானை படத்தின் டப்பிங்கை தொடங்கிய அருண் விஜய்!

அருண் விஜய்

அருண் விஜய்

ப்ரியா பாவனி சங்கர், ராதிகா சரத்குமார், யோகி பாபு, சமுத்திரகனி, போஸ் வெங்கட், அம்மு அபிராமி உள்பட பலர் யானை படத்தில் நடிக்கின்றனர், ஜீ.வி.பிரகாஷ் இசை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வந்த யானை திரைப்படம் வேகமாக வளர்ந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அருண் விஜய் தனது காட்சிகளுக்கான டப்பிங்கை நேற்று பேசினார்.

தமிழ் சினிமாவில் வேகமாக படத்தை முடிக்கிற இரு முன்னணி இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமாரும், ஹரியும். சிவகாசி பட்டாசு மாதிரி பத்த வைத்தால் போதும். சரவெடியாக சுழன்று படத்தை முடித்துவிடுவார்கள். ஹரி இன்னும் ஸ்பெஷல். அவர் எடுப்பது முழுக்க ஆக்ஷன் படங்கள். வழக்கமான காட்சிகளைவிட ஆக்ஷன் காட்சிகளை எடுக்க அதிக நாள்கள் ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஹரி இப்போது அருண் விஜய்யை வைத்து யானை படத்தை எடுத்து வருகிறார். தூத்துக்குடி, ராமேஸ்வரம் கடற்கரையோர பகுதிகளில் இதன் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டன. ப்ரியா பாவனி சங்கர், ராதிகா சரத்குமார், யோகி பாபு, சமுத்திரகனி, போஸ் வெங்கட், அம்மு அபிராமி உள்பட பலர் நடிக்கின்றனர், ஜீ.வி.பிரகாஷ் இசை.

இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் அருண் விஜய்யின் அண்ணனாக முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்தது. தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் பிரகாஷ்ராஜ் பிஸியாக இருந்ததால் அவர் நடிக்க முடியாமல் போக, அவருக்குப் பதில் சமுத்திரகனியை நடிக்க வைத்துள்ளனர்.

மேலும் படிக்க - வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் சிம்பு

படத்தை வேகமாக முடித்து இறுதிக்கட்டத்துக்கு கொண்டு வந்துள்ளார் ஹரி. அருண் விஜய் தனது காட்சிகளுக்கான டப்பிங்கை நேற்று தொடங்கியுள்ளார். இந்த மாதம் கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டை முன்னிட்டு டீஸரை வெளியிட்டு படத்தை ஏப்ரலில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Arun Vijay

அடுத்த செய்தி