ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

யார் இந்த ‘தமிழ் ராக்கர்ஸ்’? – விரைவில் வெளியாகும் இணைய தொடர்...

யார் இந்த ‘தமிழ் ராக்கர்ஸ்’? – விரைவில் வெளியாகும் இணைய தொடர்...

தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸின் போஸ்டர்

தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸின் போஸ்டர்

Tamil Rockerz : இந்த தொடரை தமிழ் சினிமா துறையினருக்கு சவாலாக விளங்கும் திருட்டு இணையதள நிறுவனமான தமிழ் ராக்கர்ஸ் மையப்படுத்தி எடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் தமிழ் ராக்கர்ஸ் இணைய தொடர் மூலம் மீண்டும் தயாரிப்பிற்கு திரும்பியுள்ளது.

தனது முதல் வெப் சீரிஸாக தமிழ் ராக்கர்ஸ் என்ற தொடரை வெளியிடுகிறது ஏ.வி.எம். நிறுவனம். இந்த இணைய தொடர் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கியுள்ள இணைய தொடர் தமிழ் ராக்கர்ஸ் அந்த இணைய தொடரை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் தயாரித்திருக்கிறது.

இதையும் படிங்க - Yaanai Movie Review : அருண் விஜய் நடித்திருக்கும் ’யானை’ படம் எப்படி இருக்கு? 

இந்த இணைய தொடருக்கான படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸ் தொடருக்கான டீசரை தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க - அரசியலில் நுழையும் எந்த எண்ணமும் இல்லை - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

இந்த தொடரை தமிழ் சினிமா துறையினருக்கு சவாலாக விளங்கும் திருட்டு இணையதள நிறுவனமான தமிழ் ராக்கர்ஸ் மையப்படுத்தி எடுத்துள்ளனர். குறிப்பாக அந்த இணையதளம் எவ்வாறு இயங்குகிறது? எப்படி புதிய திரைப்படங்களை தங்கள் இணையதளத்தில் பதிவேற்றுகின்றனர்? அதற்குப் பின்னால் இருக்கும் வியாபாரம் என்ன? இதனால் சினிமா துறை எப்படி பாதிக்கப்படுகிறது? என்ற கோணங்களில் எடுத்துள்ளனர் என கூறுகின்றனர்.

இந்த தமிழ் ராக்கர்ஸ் இணைய தொடர் Sony OTT ஓ.டி.டி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது. இதன் மூலம் சில ஆண்டுகளாக சினிமா தயாரிப்பில் இருந்து விலகி இருந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor Arun Vijay, Tamil rockers