Home /News /entertainment /

அருண் விஜய்யின் சினம் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

அருண் விஜய்யின் சினம் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சினம்

சினம்

அருண் விஜய்யின் சினம் திரைப்படம் செப்டம்பர் 16ஆம் தேதி வெளியாகிறது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
அருண் விஜய் நடித்திருக்கும் சினம் திரைப்படம் செப்டம்பர் 16ஆம் தேதி வெளியாகிறது.

GNR.குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் சினம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் ஒரு காவல் துறை அதிகாரியின் வாழ்க்கை பின்னணியில்  எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கின. ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தின் வேலைகள் முடிவடைந்தும், படம்  வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் சினம் திரைப்படத்தை வரும் 16ஆம் தேதி வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதனால் படத்தை பிரபலபடுத்தும் பணியில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் யானை என்ற திரைப்படம் திரையரங்கில் வெளியானது. அதைத் தொடர்ந்து தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையத் தொடர் கடந்த வாரம் நேரடியாக சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியிடப்பட்டது.

அதில் உண்மையில்லை... த்ரிஷா குறித்த வதந்திக்கு அவரது தாயார் முற்றுப்புள்ளி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதைத்தொடர்ந்து தற்போது மூன்றாவது படமாக சினம் திரைக்கு வர இருக்கிறது. அருண் விஜய், தான் நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெறுவதால் மகிழ்ச்சியில் உள்ளார்.
Published by:Shalini C
First published:

Tags: Actor Arun Vijay

அடுத்த செய்தி