பாக்ஸர் படத்தில் அருண் விஜய்க்கு வில்லனான தயாரிப்பாளர்

பாக்ஸர் படத்தின் தயாரிப்பாளர் மதியழகனே அந்தப் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.

பாக்ஸர் படத்தில் அருண் விஜய்க்கு வில்லனான தயாரிப்பாளர்
நடிகர் அருண் விஜய்
  • Share this:
எக்ஸெட்ரா என்டர்டெயின்மெண்ட் மதியழகன் தயாரிப்பில் பாலாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விவேக் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பாக்ஸர். அருண் விஜய் குத்துச்சண்டை வீரராக நடிக்கும் இந்தப் படம் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் துவங்கியது.

இந்தப் படத்துக்காக வெளிநாடுகளில் தற்காப்பு கலைகளை பயின்ற அருண் விஜய், ஏழாம் அறிவு பட வில்லன் ஜானி ட்ரி நக்யென்னிடம் சண்டை பயிற்சி பெற்றார். மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரே வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தேனாண்டாள் ஃபிலிம்ஸின் நிறுவனர் ஹேமா ருக்மணி வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க: நடிகை பூர்ணாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேர் கைது

முன்னதாக இன்று காலை பாக்ஸர் படம் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த அருண் விஜய், “உங்களைப் போலவே நானும் பாக்ஸர் படத்துக்காக காத்திருக்கிறேன். ஆனால் முழுமையான படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்தப் படத்துக்கு அதிக உழைப்பு தேவை என்பதால் குறிப்பிட்ட காலகட்டத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும். தயாரிப்பு நிறுவனம் தெளிவாக இருந்தால் மட்டுமே அது நடக்கும். பாக்ஸர் படம் குறித்த எனது அறிவிப்புக்காக காத்திருக்கவும்.” என்று அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

 
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading