அருண் விஜய்யின் பரபரப்பு அறிக்கை...! பாக்ஸர் படத்தில் சிக்கலா?

நடிகர் அருண் விஜய் பாக்ஸர் படம் குறித்து வெளியிட்ட அறிக்கை அந்தப் படத்தில் சிக்கல் எழுந்துள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது

அருண் விஜய்யின் பரபரப்பு அறிக்கை...! பாக்ஸர் படத்தில் சிக்கலா?
பாக்ஸர் படத்தில் அருண் விஜய்
  • Share this:
எக்ஸெட்ரா என்டர்டெயின்மெண்ட் மதியழகன் தயாரிப்பில் பாலாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விவேக் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பாக்ஸர். அருண் விஜய் குத்துச்சண்டை வீரராக நடிக்கும் இந்தப் படம் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் துவங்கியது.

இந்தப் படத்துக்காக வெளிநாடுகளில் தற்காப்பு கலைகளை பயின்ற அருண் விஜய், ஏழாம் அறிவு பட வில்லன் ஜானி ட்ரி நக்யென்னிடம் சண்டை பயிற்சி பெற்றார். மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.




பாக்ஸ்ர் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அருண் விஜய் அளித்த பேட்டி ஒன்றில், பாக்ஸர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கினால் சரியாக ஷூட்டிங் போய் நடித்து முடிக்க வேண்டும். தயாரிப்பு நிறுவனம், தயாரானால் படம் தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். நேற்று இந்தப் படம் குறித்த புதிய அப்டேட்டை தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவார் என்று படக்குழுவினர்  அறிவித்திருக்கும் நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பாக்ஸர் படம் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அருண் விஜய், “பாக்ஸர் படம் குறித்து உங்களில் பலர் என்னிடம் கேட்டு வருகிறீர்கள். இந்தப் படத்துக்காக நான் மிகவும் கடினமாக உழைத்து வந்தேன். ஆனால் இன்னும் முழுமையான படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. உடல் மற்றும் மன ரீதியாக அதிக முயற்சியும் உழைப்பும் இந்தப் படத்துக்கு தேவை என்பதால் குறிப்பிட்ட காலத்தில் அது நடக்க வேண்டும். அது தயாரிப்பு நிறுவனத்தின் தெளிவான அறிவிப்பால் மட்டுமே முடியும். எனவே படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கவும்” இவ்வாறு அருண் விஜய் கூறியுள்ளார்.



பாக்ஸர் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ஜோடியாக நிஜ குத்துச்சண்டை வீராங்கனையும் நடிகையுமான ரித்திகா சிங் நடிக்கிறார்.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading