வித்தியாசமான முறையில் அறிவிக்கப்பட்ட அருண் விஜய் படத்தின் பெயர்

பார்டர் படத்தின் டைட்டில் அறிவிப்பு

அருண் விஜய் நடிப்பில் சினம் படம் விரைவில் வெளியாக உள்ளது. இதையடுத்து அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் பெயர் நேற்று அறிவிக்கப்பட்டது.

  • Share this:
சென்னை பார்க் ஹோட்டலில் இதற்கான விழ நடந்தது. தனது பெராரே காரில் இந்த விழவுக்கு வந்தார் நடிகர் அருண் விஜய். இயக்குநர் அறிவழகன், அருண் விஜய்யின் தந்தையும், நடிகருமான விஜயகுமார், இசையமைப்பாளர் சாம் சி.எஸ். என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்துக்கு பார்டர் என பெயர் வைத்துள்ளனர். ஹோட்டலின் வெளிப்புறம் முழுவதும் தேசியகொடி வண்ணங்களால் நிறைந்திருக்க, அதில் பார்டர் என்று தமிழ், ஆங்கிலத்தில் ஒளிரும்படி செய்திருந்தனர். படத்தின் பெயரிலிருந்து இது ராணுவம் சம்பந்தப்பட்ட கதை என தெரிகிறது. இதில் ஆச்சரியமான விஷயம், படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. விரைவில் சாம் சி.எஸ். படத்தின் பின்னணி இசைக்கோர்வையை செய்யவிருக்கிறார்.இதற்குமுன் அறிவழகன், அருண் விஜய் இணைந்து உருவாக்கிய குற்றம் 23 வெற்றி பெற்றது. அதனால் பார்டருக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Published by:Sheik Hanifah
First published: